கந்தர்வகோட்டையில் ரூ.3 கோடியில் வேளாண்மை விரிவாக்க மையம் காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>கந்தர்வகோட்டையில் ரூ.3 கோடியில் வேளாண்மை விரிவாக்க மையம் காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்</strong></p>
<p>புதுக்கோட்டை, பிப்.17- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில், ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தினை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை தொடங்கி வைத்தார். வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் 16 உழவர் அங்காடிகளை தொடங்கி வைத்து, 23 வேளாண் - உழவர் நலத்துறை கட்டடங்களை திறந்து வைத்து, 54 தொழில் முனைவோர்களுக்கு மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்க ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கி, இயந்திர வாடகை சேவையினை வலுப்படுத்த 672 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் சேவைகளை முதல்வர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, கந்தர்வகோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா, கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, இணை இயக்குநர் (வேளாண்மை) மு.சங்கரலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
