தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தட்டப்பாறையில் ரூ.7 கோடியில் குழந்தைகள் இல்ல புதிய கட்டடம் முதலமைச்சர் திறந்து வைத்தார்

4 Mar 2026, 5:01 pm
தட்டப்பாறையில் ரூ.7 கோடியில்  குழந்தைகள் இல்ல புதிய கட்டடம் முதலமைச்சர்  திறந்து வைத்தார்
<p><strong>புளியங்குடியில் அரசு நகர்ப்புற &nbsp;ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் &nbsp;முதலமைச்சர் திறந்து வைத்தார்</strong></p> <p>தென்காசி, மார்ச் 4- தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதியதாக ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட் டுள்ளது.தமிழக மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மார்ச் 4 புதனன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இதனை திறந்து வைத்தார். புளியங்குடி திறந்து வைக்கும் நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணி ஸ்ரீகுமார், வாசுதேவ நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.தி.சதன் திருமலைக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ சேவையினை துவக்கி வைத்தனர். &nbsp;தமிழ்நாடு முதலமைச்சரால் &nbsp;திறந்து வைக்கப்பட்டுள்ள புளியங்குடி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1 மருத்துவ அலுவலர், 1 மருந்தாளுநர், 1 ஆய்வக நுட்புநர், &nbsp;4 செவிலியர்கள், 6 நகர்ப்புற சுகாதார செவிலியர்கள், 1 பகுதி நேர சுகாதார செவிலியர் பணியி டம் அமர்த்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்தார். தொடர்ந்து, 10 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கோவிந்தன், புளியங்குடி நகர்மன்ற தலைவர் எஸ்.விஜயா , நகராட்சி ஆணையாளர் பா.நாகராஜ் , நக ராட்சி துணைத்தலைவர் அந்தோணிசாமி, வட்டார மருத்துவ அலுவலர்கள் மரு.ராதிகா, மரு.பவன்ராஜ் மற்றும் அரசு அலு வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.