வடலூர் அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம் முதலமைச்சர் திறந்து வைத்தார்
20 Nov 2025, 3:46 pm
<p><strong>வடலூர் அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம் முதலமைச்சர் திறந்து வைத்தார்</strong></p>
<p>கடலூர், நவ.20- வடலூர் பார்வதிபுரத்தில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொளி வழியாக திறந்து வைத்தார். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் மரு.எம்.கே. விஷ்ணுபிரசாத் ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி மாணவர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது. 22.06.2022 அன்று தொடங்கப்பட்ட இக்கல்லூரிக்கு மாணவர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதியுள்ள இடத்தில் நிரந்தர கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 777 மாணவர்கள் பயின்று வரும் இக்கல்லூரிக்கு 5.50 ஏக்கர் பரப்பளவில் ரூ.13.71 கோடி மதிப்பீட்டில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடலூர் நகரமன்ற தலைவர் சு.சிவக்குமார், துணைத்தலைவர் ரா.சுப்புராயலு, கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் அ.மலர், திட்டங்கள் கோட்டம், தஞ்சாவூர் செயற்பொறியாளர் சிவகுமார், வடலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஐ.வண்ணமுத்து, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
