முந்தய பக்கம்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல்வர் உதவி

8 Dec 2025, 4:39 pm
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல்வர் உதவி
<p><strong>பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல்வர் உதவி </strong></p> <p>சென்னை, டிச. 8- கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்த நான்கு குழந்தைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு உதவிகளை வழங்கினார். சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் நவ.14 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மனைவி வசந்தியும் 2017 ஆம் ஆண்டே காலமாகியிருந்தார். இத்தம்பதியருக்கு மூன்று பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை முதலமைச்சர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என உறுதியளித்திருந்தார். &nbsp;திங்களன்று (டிச.8) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த கமலக்கண்ணனின் மகள் லாவண்யாவிற்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.55 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்ட ஒதுக்கீடு, சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டன. மகள் ரிஷிகா மற்றும் மகன் அப்னேஷ் ஆகியோருக்கு அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2000 நிதி உதவித்தொகை, மகள் ரீணாவிற்கு அழகு கலை திறன் பயிற்சிக்கு ரூ.6000 உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram