தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈரோட்டில் ரூ. 605.44 கோடி திட்டங்கள்: முதலமைச்சர் அர்ப்பணித்தார்

26 Nov 2025, 3:40 pm
ஈரோட்டில் ரூ. 605.44 கோடி திட்டங்கள்: முதலமைச்சர் அர்ப்பணித்தார்
<p><strong>ஈரோட்டில் ரூ. 605.44 கோடி திட்டங்கள்: முதலமைச்சர் அர்ப்பணித்தார்</strong></p> <p>ஈரோடு, நவ.26 &ndash; ஈரோடு சோலாரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோடு &nbsp;மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக சுமார் 605 கோடியே 44 &nbsp;லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு &nbsp;திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார். &nbsp;இந்த விழாவில், 91 கோடியே 9 &nbsp;லட்சம் ரூபாய் மதிப்பிலான 23 புதிய &nbsp;திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. &nbsp;அத்துடன், 235 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான 790 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டன. விழா வின் முக்கிய அம்சமாக, 1 லட்சத்து 84 ஆயிரத்து 491 பயனாளிகளுக்கு, 278 &nbsp;கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பி லான பல்வேறு அரசு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன. வரலாற்றுச் சிறப்புமிக்க நலன் சார்ந்த அறிவிப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் நீண்ட &nbsp;காலக் கோரிக்கைகளை நிறை வேற்றுவதில் உள்ள மனநிறைவை வெளிப்படுத்தினார். அந்தியூர் வட்டத்துக் குட்பட்ட 29 கிராமங்களில், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப் பட்ட 6000 ஏக்கர் நில ஒப்படைப் பட்டாக்களில், நிலவி வந்த &ldquo;நிபந்தனைக் குட்பட்ட பட்டா&rdquo; என்ற வாசகத்தை நீக்கி, &nbsp;அதனை நிரந்தரப் பட்டாவாக மாற்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வரலாற்று நடவடிக்கையின் மூலம் சுமார் 2,680 &nbsp;நில உடமைதாரர்கள் பயனடைவர். மேலும், கடந்த நான்கரை ஆண்டு களில் மட்டும் ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.5,491 கோடி மதிப்பீட்டில் 68,85, 232 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், ரூ.3,836 &nbsp;கோடி மதிப்பீட்டில் 19,488 வளர்ச்சித் &nbsp;திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டிருப் பதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். &nbsp;ஈரோடு மாவட்டத்திற்கான ஆறு புதிய அறிவிப்புகள் ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஆறு புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்: புதிய நகராட்சி அலுவலகக் கட்டி டங்கள்: புன்செய் புளியம்பட்டி நக ராட்சிக்கு ரூ.4.30 கோடி செலவிலும், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு ரூ.4.50 கோடி செலவிலும் புதிய நக ராட்சி அலுவலகக் கட்டிடங்கள் கட்டப் படும். பவானிசாகர் திட்டப் பட்டாக்கள் நிரந்தரம்: பவானிசாகர் மற்றும் கீழ் பவானி நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட பட்டாக்களை நிரந்தரப் பட்டாவாக மாற்றும் கோரிக்கையை ஏற்று, சத்திய மங்கலம், நம்பியூர், பவானி, கோபி செட்டிபாளையம், மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை மற்றும் ஈரோடு &nbsp;ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 90 &nbsp;கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக் கான விவசாயிகளின் பட்டாக்கள் நிரந்தரப் பட்டாவாக மாற்றப்படும். புதிய தடுப்பணை: அந்தியூர் அருகேயுள்ள தோனிமடுவுப் பள்ளத்தின் &nbsp;குறுக்கே 4 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை அமைக்கப்படும். சாயப் பட்டறைக் கழிவு வல்லுநர் குழு: சாயப்பட்டறைக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கு இழப்பீடு வழங் குவது தொடர்பாக உள்ள சட்டச் சிக்கல் களைத் தீர்க்க வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும். புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்: பெருந்துறையில் உள்ள &nbsp;வட்டாரப் போக்குவரத்து அலுவல கத்திற்கு 5 கோடி ரூபாயில் புதிய கட்டி டம் கட்டித் தரப்படும். நிலப் பதிவேடு மாற்றம்: அந்தியூர் மற்றும் எண்ணமங்கலம் வருவாய் கிராமங்களில் உள்ள நிலங் களுக்கான பதிவேடுகளில் உள்ள நிபந்தனைப் பட்டாக்கள், அயன் பட்டாக் களாக மாற்றப்படும். இவ்விழாவில் அமைச்சர்கள் கே. என்.நேரு, முத்துசாமி, மு.பெ.சாமி நாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், சுப்பராயன், பிரகாஷ், சட்டமன்ற உறுப்பி னர்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், வி.சி. சந்திரகுமார் மற்றும் மேயர் சு.நாக ரத்தினம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.