வைரமுத்துவுக்கு முதல்வர் வாழ்த்து!
14 Mar 2026, 2:57 pm
<p><strong>வைரமுத்துவுக்கு முதல்வர் வாழ்த்து!</strong></p>
<p>சென்னை, மார்ச் 14 - கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். “தமிழில் இதுவரை அகிலனும் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நின்று கவிப்பேரரசை வாழ்த்துகிறேன். கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது!” என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p> </p>
