முந்தய பக்கம்

தோட்டா தரணிக்கு செவாலியே விருது!  முதலமைச்சர் வாழ்த்து

12 Nov 2025, 3:20 pm
தோட்டா தரணிக்கு செவாலியே விருது!  முதலமைச்சர் வாழ்த்து
<p><strong>தோட்டா தரணிக்கு செவாலியே விருது! &nbsp;முதலமைச்சர் வாழ்த்து</strong></p> <p>சென்னை: கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் &nbsp;அரசு 1957-ஆம் ஆண்டு முதல் &lsquo;செவாலியே&rsquo; விருதை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான செவாலியே &nbsp;விருது, திரைப்பட கலை இயக்குநர் 64 ஆண்டுகளாக பணி யாற்றி வரும் தோட்டா தரணி-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. &nbsp;முதல்வர் வாழ்த்து இந்நிலையில், தோட்டா தரணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டில் &nbsp;ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை &nbsp;மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணிக்கு, பிரான்சு அரசின் &nbsp;உயரிய அங்கீகாரமான செவாலியே விருது அறிவிக்கப் பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். &nbsp;அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா &nbsp;தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமை யளிக்கிறது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தோட்டா தரணிக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலி னும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram