தீக்கதிர் முக்கிய செய்திகள்
9 Dec 2025, 4:25 pm

சோனியா காந்திக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தியின் 79 ஆவது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவரது வாழ்க்கை தியாகம், தன்னலமற்ற பொதுப் பயணம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்தும் பயணத்தை பிரதிபலிக் கிறது. இந்தியாவிற்கான நமது முயற்சிகளை அவரது வழி காட்டுதல் தொடர்ந்து வலுப்படுத்தட்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

மணல் கொள்ளை விசாரணை சட்டவிரோதம்: தமிழக அரசு

சென்னை: மணல் கொள்ளை தொடர்பாக அம லாக்கத் துறை பதிவு செய்த புகாரின் அடிப்படையில், தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசிய மில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் 2023 ஏப்ரல் 25-ஆம் தேதி மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட் டார். இது சம்பந்தமான வழக்குகளின் அடிப்படையில் அம லாக்கத் துறை விசாரணை நடத்தி, சேகரித்த ஆதாரங்க ளின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்யக் கோரி டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது. நடவடிக்கை எடுக்காத தால், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத் துறை தகவல் பகிர்ந்த தற்காக மாநில அரசு வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசிய மில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் விதித்த தடையை மீறி அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது சட்டவிரோதம் என்றும், இது கூட்டாட்சி தத்து வத்திற்கு எதிரானது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை டிச.16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உதகை, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம்

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங் களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஒன்றியங்களைப் பிரித்து குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி உதகை ஒன்றியமும், 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி குந்தா ஒன்றியமும் பிரிக்கப்பட்டுள்ளன. கூடலூரை பிரித்து பந்தலூர் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவப் பல்கலை. மசோதாவை ஆளுநர் வெறுப்பது ஏன்?

சென்னை: தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவத்தை ஏன் ஆளுநர் வெறுக்கிறார் என்று தெரியவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த அக்.15 ஆம் தேதி இரண்டாவது முறையாக முதல மைச்சரால் அனுப்பப்பட்ட சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவை ஆளுநர் இதுவரை தன் இருப்பில் வைத்திருந்து இப்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று அமைச்சர் தெரி வித்தார். சித்த மருத்துவம் சங்க காலத்திலிருந்து தமிழர்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் மருத்துவ முறை என்பதை அமைச்சர் நினைவூட்டினார். முதலமைச்சர் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கி அரும் பாக்கத்தில் அலுவலகம் அமைத்துள்ளதோடு, மாதவரம் பால் பண்ணை பகுதியில் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

3 நாட்கள் பன்னாட்டு புத்தகக் காட்சி சென்னை: சென்னை

கலைவாணர் அரங்கில் பன்னாட்டு புத்தகக் காட்சி நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பா ளர் சங்கம் சார்பில் 49 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 7 முதல் 19 வரை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும். 900-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட வுள்ளன. பொங்கல் விடுமுறையையொட்டி திட்டமிடப்பட்ட இந்த காட்சி வார நாள்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார இறுதி மற்றும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்நிலை யில், சென்னை கலைவாணர் அரங்கில் ஜன. 16, 17, 18 ஆகிய தேதிகளில் பன்னாட்டு புத்தகக் காட்சி நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

டிஜிபி மருத்துவமனையில் அனுமதி சென்னை: தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட ராமன் நெஞ்சு வலியால் சென்னை கிண்டி மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டா ரங்கள் தெரிவித்தன. கடுமையான சட்டவிதிகள் ஏன்? சென்னை: தொண் டர்கள் மற்றும் மக்கள் பாதுகாப்புக்காகவே பொதுக் கூட்டங்களுக்கு கடுமையான சட்டவிதிகள் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தெரிவித்து உள்ளார். கரூர் சம்பவம் போன்று இனி எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படுவதாகவும் அமைச்சர் கூறினார். வைகோ விமர்சனம் சென்னை: நீதித் துறையை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த கருத்து களை தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டி னார். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு சொந்த கருத்துகளை தெரி விக்கும் அபாயம் உரு வாகி யுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திருப்பரங் குன்றத்தில் ஏற்பட்ட பிரச் சனை முழுக்க முழுக்க இந்துத்துவா அமைப்பி னரால் ஏற்படுத்தப்பட்ட தாகவும், எந்தவித கலவரத் துக்கும் மக்கள் இடம் கொடுக்கவில்லை என்றும் வைகோ கூறினார். மருத்துவத்தில் ஒரு லட்சம் பேர் பயன் சென்னை: திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 35,702 புதிய பணி நியமனங்கள், 43,375 கலந்தாய்வு