தீக்கதிர் முக்கிய செய்திகள்
8 Nov 2025, 4:19 pm

ரேவந்த் ரெட்டிக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “அவர் மகிழ்ச்சியாக நல்ல ஆரோக்கியத்துடன், இன்னும் பல ஆண்டுகள் பொது சேவை செய்ய வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரிக்கை

மதுரை: தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை அலுவ லர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் வெள்ளிக் கிழமை மதுரையில் மாநிலத் தலைவர் சண்முகம் தலை மையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் குணசேகரன், பொருளாளர் ராஜ குரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஞானத்தம்பி பேசினார். இக்கூட்டத்தில், அரசு, தேர்தல் கால வாக்குறுதியான பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப் படி உயர்வை மாநில அரசு வழங்க வேண்டும். காலியாக உள்ள மூன்றாம் நிலை பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மீதமுள்ள ஊர்ப்புற நூலகர்களை கால முறை ஊதிய அடிப்படையில் பணியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

போதைப்பொருளுக்கு எதிராக நடைபயணம்: வைகோ அறிவிப்பு '

சென்னை: போதைப் பொருட்கள் பயன்பாட்டை எதிர்த்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் இருந்து மதுரை வரை ஜன.2 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நடைபயணம் தொடங்குகிறார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் வைகோ தெரிவிக்கையில், “லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு எதிராக நவம்பர் 11 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடை பெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பெருமளவில் பங்கேற்கும். தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிராக ஜனவரி 2 ஆம் தேதி திருச்சியில் இருந்து நடைபயணமாக புறப்பட்டு மணப்பாறை, திண்டுக்கல் வழியாக ஜனவரி 12 ஆம் தேதி மதுரையை அடைந்து எங்களது பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

இலங்கை கைதி குடும்பத்தினரை சந்திக்க நீதிமன்றம் அனுமதி

சென்னை: புழல் சிறையில் உள்ள இலங்கை கைதியை அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறையில் உள்ள இலங்கையைச் சேர்ந்த கைதி புஷ்பராஜ், குடும்பத்தினரை சந்திக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் இலங்கையில் உள்ள தனது தாயுடன் தொலைபேசி மூலம் பேச முறையாக அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப் பட்டது. சிறைகளில் உள்ள வெளிநாட்டினர் தங்களது குடும்பத் தினரை சந்திக்க, தொலைபேசி மூலம் பேச விதிகள் உள்ளன என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயம்

சென்னை: குடியி ருப்புகள், வணிகத் தொ ழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவன வளா கங்களில் மின்சார வாக னங்களுக்கான சார்ஜிங் வசதியை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு விதிகளில் திருத்தம் செய்து உத்தரவிட்டு உள்ளது. 750 சதுர மீட்ட ருக்கு அதிகமான கட்டு மான பரப்பு கொண்ட கட்டடங்கள், 8 வீடு களுக்கும் அதிகம் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள், 300 சதுர மீட்டர் FSI-க்கு மேல் உள்ள வணிக கட்டிடங்க ளில் மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்று அரசு தெரிவித்து உள்ளது.