முந்தய பக்கம்

குடியரசு நாள் விழா வெற்றியாளர்களுக்கு முதல்வர் பாராட்டு

6 Feb 2026, 5:17 pm
குடியரசு நாள் விழா வெற்றியாளர்களுக்கு முதல்வர் பாராட்டு
<p><strong>குடியரசு நாள் விழா வெற்றியாளர்களுக்கு முதல்வர் பாராட்டு</strong></p> <p>சென்னை, பிப்.6 - &nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (பிப்.6) தலைமைச் செயலகத்தில், 2026 குடியரசு நாள் விழாவில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் கலாச்சார நிகழ்ச்சி களில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கும், பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற துறைகளுக்கும் கேடயங்களை வழங்கி சிறப்பித்தார். பள்ளி மாணவிகளின் கலாச்சார நிகழ்ச்சிகளில் பெருந்தலைவர் காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முதல் பரிசும், லேடி சிவகாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டாம் பரிசும், தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகளுக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டன. கல்லூரி மாணவிகளின் கலாச்சார நிகழ்ச்சிகளில் சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு முதல் பரிசும், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு இரண்டாம் பரிசும், இராணிமேரி கல்லூரிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டன. அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் இந்து சமய அறநிலையத் துறைக்கு முதலிடமும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு இரண்டாம் இடமும், காவல் துறைக்கு மூன்றாம் இடமும் கிடைத்தன.</p>
Share
FacebookXWhatsAppTelegram