தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

9 Nov 2025, 2:37 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தகுதியான வாக்காளர்  பெயர் விடுபடக் கூடாது: முதல்வர்

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமையக் கூடாது என்பதற்காக பாஜக  பல்வேறு திட்டமிடல்களைச் செய்கிறது” என்றார்.  “வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் என எந்த நிறுவனத்தையும் நமக்கு எதிராக  பயன்படுத்த தயாராக இருக்கிறார்கள் என்றும் முதலமைச்சர்  கடுமையாக குற்றம் சாட்டினார். எஸ்.ஐ.ஆர் குறித்து பொது மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. தகுதியான  ஒரு வாக்காளர் பெயர்கூட பட்டியலில் விடுபடக் கூடாது.  தகுதி இல்லாத வாக்காளரையும் இணைக்கக் கூடாது.  மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்” என்று முதலமைச்சர் அறி வுறுத்தினார்.

புதுக்கோட்டை, திருச்சியில்  முதலமைச்சர் கள ஆய்வு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த  வகையில், நவ,9, 10 ஆகிய இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் கள ஆய்வு மேற் கொள்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக் கிழமை சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு புறப்பட்டார். திங்கட்கிழமை (நவ.10) காலை 11 மணிக்கு புதுக் கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே மூகாம்பிகை பொறியி யல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில், ரூ.201 கோடியே 70 லட்சம் மதிப்பில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், ரூ.223  கோடியே 6 லட்சம் மதிப்பில் 577 முடிவுற்ற திட்டப் பணிகளை யும், ரூ.348 கோடியே 43 லட்சம் மதிப்பில் 44,093 பயனாளி களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.  ‘அன்புச்சோலை’ திட்டம் திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத் திட முதியோர் மனமகிழ் வளமையம் ‘அன்புச்சோலை’ திட்டத் தைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் பொன்மலைப்பட்டியில் பாவை குழுமத்தின் அன்புச்சோலை முதியோர் இல்லத்தை திறந்து வைத்து சென்னை திரும்புகிறார்.

2002, 2005 வாக்காளர் விவரங்களுக்கு இணையதள வசதி

சென்னை: கடந்த 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டின் முந்தைய வாக்காளர் விவரங்களை கண்டறியும் வகையில்  இணையதள வசதி செயல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.  வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்குச் சென்று படிவங்களை நேரடியாக வழங்கி வருகின்றனர். தலைமை தேர்தல் அதிகாரியின் அதிகாரப்பூர்வ இணைய தளமான https://www.elections.tn.gov.in/ -இல் 2002/ 2005 வாக்காளர் பட்டியல் விவரங்கள் பொதுமக்கள் அணுகக் கூடிய வகையில் உள்ளிடப்பட்டுள்ளது. வாக்கா ளர்கள் தங்களது பெயர் அல்லது அடையாள அட்டை  எண்ணைப் பயன்படுத்தி விவரங்களை தேடி கண்டறியலாம்.

மருத்துவமனைகளுக்கு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அனைத்து மருத்துவமனை களும் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் எச்சரித் துள்ளது. tncea.dmrhs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மருத்துவமனைகளை பதிவு செய்ய வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யாத மருத்துவ மனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போலி மருத்துவர் தொடர்பான புகார்களை tncea.dmrhs @gmail.com என்ற முகவரியில் பொதுமக்கள் தெரிவிக்க லாம் என்றும் இயக்ககம் அறிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.