தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோழர் ஆர்.நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர், தலைவர்கள் அஞ்சலி

26 Feb 2026, 3:28 pm
தோழர் ஆர்.நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர், தலைவர்கள் அஞ்சலி

தோழர் ஆர்.நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர், தலைவர்கள் அஞ்சலி

தோழர் ஆர்.நல்லகண்ணு உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் செங்கொடியை போர்த்தி செவ்வணக்கம் செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர்கள் எம்.ராமகிருஷ்ணன் (வடசென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை) உள்ளிட்டோர் தோழர் ஆர்.நல்லகண்ணு உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தகைசால் தமிழர் தோழர் ஆர்.நல்லகண்ணு உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் உள்ளனர்,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், எஸ்.கண்ணன், என்.பாண்டி, செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் நாகைமாலி எம்எல்ஏ, ஆர்.பத்ரி, வே.ராஜசேகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தோழர் ஆர்.நல்லகண்ணு உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்
தொல்.திருமாவளவன் அஞ்சலி செலுத்தினர்.

கேரள அரசின் சார்பில் சட்டமன்ற முன்னாள்  பேரவைத் தலைவர் விஜயகுமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலத் தலைவர் ஜி.சுகுமாறன், பொருளாளர் எஸ்.ராஜேந்திரன் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வபெருந்தகை  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.