முந்தய பக்கம்

தோழர் ஆர். நல்லகண்ணுவின்  101 ஆவது பிறந்தநாள் முதலமைச்சர் வாழ்த்து

26 Dec 2025, 4:32 pm
தோழர் ஆர். நல்லகண்ணுவின்  101 ஆவது பிறந்தநாள் முதலமைச்சர் வாழ்த்து
<p><strong>தோழர் ஆர். நல்லகண்ணுவின் &nbsp;101 ஆவது பிறந்தநாள் முதலமைச்சர் வாழ்த்து</strong></p> <p>சென்னை: இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணுவின் 101 &nbsp;ஆவது பிறந்தநாள் டிச.26 (வெள்ளிக் கிழமை) அன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத் தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 1948 காலக் கட்டத்தில் பொதுவுடைமைக் கட்சி தடை &nbsp;செய்யப்பட்ட போது கைது செய்யப்பட்டவர்களில் நல்ல கண்ணுவும் ஒருவர். தமிழ்நாட்டில் பொதுவுடைமைக் கருத்தி யல் வளர உழைத்ததில் அவரது பங்கு மிகப்பெரியது. முதலமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில், &ldquo;விடுதலைப் &nbsp;போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் &nbsp;நூற்றாண்டு நாயகர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சியான, எண்ணற்ற இளைஞர்களுக்கு எடுத்துக் காட்டான தாங்கள் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் &nbsp;நிறைவாழ்வு வாழ்ந்திட விழைகிறேன்&rdquo; எனக் குறிப்பிட்டுள்ளார்</p>
Share
FacebookXWhatsAppTelegram