தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிநவீன பிராட்வே பேருந்து நிலையம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

30 Jan 2026, 2:24 pm
அதிநவீன பிராட்வே பேருந்து நிலையம்   முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

அதிநவீன பிராட்வே பேருந்து நிலையம்   முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை, ஜன.30- சென்னை மாநகரின் முக்கிய இடத்தில் பிராட்வே நிலையம் அமைந்துள்ளதாலும், மக்கள் தொகை பெருக்கத் தினாலும், இட நெருக்கடி யால் வெளியூர் செல்லும் பேருந்துகள் 2002-ஆம்  ஆண்டு நவம்பரில் கோயம் பேட்டிற்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர், பிராட்வே பேருந்துநிலையம் மாநகரப் பஸ்களுக்கான நிலையமாக மாற்றப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. பிராட்வே பேருந்து நிலை யத்தில் சிறுகடைகள் அதிக மாக உள்ளதாலும், இட நெருக்கடியாலும், இப்பேருந்து நிலையத்தை நவீனப்படுத்த ஏற்கெனவே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. அதன்படி, பிராட்வே பேருந்து நிலையத்தில்  ரூ.822 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிக ளுடன் புதிதாக கட்டப்பட வுள்ள பல்நோக்கு ஒருங்கி ணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  வியாழனன்று (ஜன.29) அடிக்கல் நாட்டினார். இத்திட்டம் உயர்நீதி மன்றம் மெட்ரோ நிலையம், குறளகம் மற்றும் புறநகர் ரயில் நிலையம் ஆகிய வற்றை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாக திட்டமிடப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 9 தளங்களைக் கொண்ட வணிக வளாக கட்டிடம் மற்றும் 10 தளங்களைக் கொண்ட குறளகம் கட்டடம் ஆகியவை திட்டமிடப் பட்டுள்ளது. இவை 73 பேருந்து நிறுத்தங்களும், பயணிகள் கூடம், சில்லறை வணிக தளங்கள், அலுவ லகப் பகுதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாக னங்களுக்கான நிறுத்துமிட வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த திட்டமானது 26,240 சதுர மீட்டர் பரப்பளவு  உள்ள இடத்தில் மொத்தம் 1,36,580 சதுர மீட்டர் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மூன்று முக்கிய கட்டட பிரிவுகளைக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த பரப்பளவு 1,08,290 சதுர மீட்டர் ஆகும். இதில் இரண்டு அடித்தளங்கள் ஒரு தரைத்தளம் மற்றும் எட்டு  மேல் தளங்கள் கொண்ட தாகும். பயணிகள் நேரடி யாக உயர்நீதிமன்றம் மெட்ரோ நிலையம், என்.எஸ்.சி. போஸ் ரோடு, எஸ்பி ளேடு ரோடு மற்றும் டி.என்.பி.எஸ்.சி. ரோடு நுழைவு மற்றும் வெளியேற்று அமைப்பு வழியாக பேருந்து நிலையம் முதல் அடித்த ளத்தில் அமைந்து உள்ள பயணிகள் கூடத்தின் வழி யாக தரை மற்றும் முதல் தளத்தில் பேருந்து நிலை யங்களுக்கு செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப் பின்படி பயணிகளுக்கும் பஸ்களுக்கும் ஏற்படும் இடையூறுகள் முற்றிலுமாக தவிர்க்கப்படும். 2-வது அடித் தளம் கார் நிறுத்துமிடத் திற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் 2 அடுக்கு கார்  நிறுத்தும் அமைப்பு உள்ளது. தரை மற்றும் முதல் தளம் பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 73 பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பயணிகளுக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்படும். 2-வது முதல் 8-வது தளங்கள் வரை அலுவலக பயன்பாட்டிற் காக ஒதுக்கப்பட்டு உள்ளன.  22,794 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட குறளகம் கட்டடம் 2 அடித்தளங் கள், தரைத்தளம் மற்றும் 9  மேல்தளங்களை கொண்ட கட்டடமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. முதல் அடித் தளத்தில் இருந்து பயணி களை கட்டடத்தின் பயணி கள் கூடத்திற்கும், கார் நிறுத்துமிடத்திற்கும் நேரடி யாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், அமைச் சர்கள் கே.என். நேரு, ராஜ கண்ணப்பன், .பி.கே. சேகர் பாபு, மேயர் ஆர். பிரியா, மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்ட னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.