தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

25 Jan 2026, 4:16 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

இன்று முதல்வர் திருச்சி வருகை

திருச்சிராப்பள்ளி: தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி யில் ஜன. 26 அன்று திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற தலைப்பில் திமுக டெல்டா மண்டல மகளிர்  அணி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இதனையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி  வருகிறார். திருச்சியில் திருமண நிகழ்ச்சிகளிலும் பங்கேற் கிறார். முதலமைச்சர் திருச்சி வருகையையொட்டி, பாது காப்பு காரணங்களைக் கருதி ஜன. 26 மற்றும் 28 ஆகிய  இரண்டு நாட்களும் நள்ளிரவு 12 மணி வரை முதல மைச்சர் பயணிக்கும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை  விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த  5 பேருக்கு பத்ம விருதுகள்

சென்னை: இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக் கப்பட்ட 54 பேருக்கு 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருது கள் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமி ழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இடம்பெற்றுள்ளனர். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப் பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாகச்  செயல்பட்டு வரும் சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள்  ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இவ்வாண்டு விருது கள் ஜன.26 ஆம் தேதி குடியரசு நாள் விழாவில் வழங்கப் படவுள்ளன. தமிழகத்திலிருந்து விருது பெறுவோர்: நீலகிரியைச் சேர்ந்த குரும்பா ஓவியர் ஆர்.கிருஷ்ணா, திருவாரூர் மிருதங்க கலைஞர் பக்தவச்சலம், சேலத்தைச் சேர்ந்த வெண்கல சிற்பக் கலைஞர் ராஜஸ்பதி காளியப்ப கவுண்டர், கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணிய மூர்த்தி நடேசன், திருத்தணியைச் சேர்ந்த ஓதுவார் சுவாமி நாதன் ஆகிய ஐவருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களுடன் புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்ப  கலைஞர் கே.பழனிவேலுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

காவல்துறையில் 44 பேருக்கு  குடியரசு தின பதக்கங்கள்

சென்னை: தமிழ்நாட்டளவில் மெச்சத்தக்க நுண்ணறிவு  மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்க பிரிவில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய 44 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி, 43 காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் ஒரு தனிப் பிரிவு உதவியாளர் நுண்ணறிவுப் பிரிவினருக்கு முதல மைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம் வழங்கப்படும். விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா பத்து  கிராம் எடையுடைய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய்  ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட விருதுகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.

மாணவியின் குடும்பத்துக்கு நிதியுதவி

சென்னை: சேலத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி யின் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி  வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் சதாசிவபுரம் கிராமத்தில் உள்ள  அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கணினி அறி வியல் முதலாமாண்டு பயின்று வந்த கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூர் ராயக்கோட்டையைச் சேர்ந்த திவ்யதர்ஷினி என்ற  17 வயது மாணவி, ஜன.23 ஆம் தேதி பிற்பகல் சக மாணவி யருடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர் பாராதவிதமாக மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இச்செய்தி யறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்ததாக வும், உயிரிழந்த மாணவி திவ்யதர்ஷினியின் குடும்பத்தின ருக்கு ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினகரன் அதிமுகவோடு கூட்டணி  சேர்ந்திருப்பது வெட்கக் கேடானது!

அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம் புதுக்கோட்டை, ஜன.25 -  அதிமுகவைப் பற்றி கடுமையாக விமர்சித்துவிட்டு, அதே கட்சியோடு டி.டி.வி.தினகரன் கூட்டணி சேர்ந்திருப்பது வெட்கக் கேடானது என்று மாநில இயற்கை  வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அதிமுக  ஒரு பகுதியும், பாஜக ஒரு பகுதியுமாக இணைந்த கூட்டணிதானே தவிர, அது வலு வான கூட்டணி இல்லை. பலவீனமான கூட்டணிதான். அது எத்தனை கட்சிகளோடு வந்தாலும் இந்தியா கூட்டணியை யாரா லும் ஒன்றும் செய்ய முடியாது. வரும் தேர்தல் திமுகவுக்கு கடைசி சேர்தல் என்று அதிமுக பொதுச் செயலா ளர் பழனிசாமி கூறுகிறார். 11 முறை தோல்வி யைச் சந்தித்த அவருக்கு 12 ஆவது தோல்வியை வரும் தேர்தல் தரும். அதிமுக வைப் பற்றி கடுமையாக விமர்சித்துவிட்டு அதே கட்சியோடு டி.டி.வி.தினகரன் கூட்டணி  சேர்ந்திருப்பது வெட்கக் கேடானது’” என்றார்.

தமிழக காவல்துறை அதிகாரிகள் 3 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

சென்னை, ஜன. 25 -  குடியரசு நாள் விழாவையொட்டி, தமிழக காவல்துறை யைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளுக்கு குடியரசுத் தலை வர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. துணை கண்காணிப்பாளர் குமரவேலு, துணை ஆணை யர் அன்வர் பாஷா மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பா ளர் மகேஸ்வரி ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு காவல்து றையைச் சேர்ந்த 21 அதிகாரிகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காவல் ஆணையர்கள் அனில் குமார், சரவண சுந்தர், துணை  கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட 21 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. தமிழக தீயணைப்புத் துறையில் உள்ள நிலைய அதிகாரி கள் ஆண்டவராஜ் ஆறுமுகம், சுரேஷ்குமார், பொன்னுசாமி மற்றும் தீயணைப்பு வீரர் இளங்கோவன் ஆகியோருக்கும், சீர்திருத்த சேவைகளுக்கான பதக்கங்கள் உதவி சிறை அலு வலர் பொன் பகவத் சிங், செல்லதுரை, சிவகாமி ஆகியோரு க்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள்  படைப்புகளை நாட்டுடைமையாக்க  நாகை மாலி எம்எல்ஏ கோரிக்கை

சென்னை, ஜன.25 -  திருவாரூர் மாவட்டம், வண்டலைச் சேர்ந்த எழுத்தாளர்  சோலை சுந்தர பெருமாளின் படைப்புகள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்றக் குழு தலைவர் நாகை மாலி கோரிக்கை விடுத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த நாகை மாலி வழங்கிய கோரிக்கை கடிதத்தில், சோலை  சுந்தரபெருமாள் படைப்பு நூல்கள், பள்ளி - கல்லூரிகளில் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பல்வேறு  அமைப்புகளின் சார்பில் பல விருதுகளை பெற்றுள்ள தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையை  நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் ஏராளமாக படைத்து டெல்டா மாவட்ட மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்றும், எனவே அவரது அனைத்து நூல்களையும் அரசு டமையாக்கிட ஆவன செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன.28-இல் அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை

சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள்  பயணமாக ஜன.28 ஆம்  தேதி தமிழ்நாடு வரு கிறார். ஜன. 28 மற்றும் 29  ஆகிய தேதிகளில் தமிழ் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளில் அமித் ஷா பங்கேற்க உள்ளார். என்.டி.ஏ பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், அமித் ஷாவும் தமிழ்நாடு வருகிறார்.

பேறுகால விடுப்பு  வழங்க உத்தரவு

சென்னை: பெண்  ஊழியர்களின் மூன்றா வது பிரசவத்திற்கும் சம்ப ளத்துடன் கூடிய பேறு கால விடுப்பு வழங்க உச்ச  நீதிமன்றமும் உயர் நீதி மன்றமும் உத்தரவிட்டு உள்ளன. பேறுகால விடுப்பு கோரி வழக்கு வராத வகையில், அனைத்து மாவட்ட நீதி மன்றங்கள், நீதிமன்ற பதி வாளர்கள், அதிகாரி களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தலைமைப் பதி வாளருக்கு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘பாஜகவின் பிடிக்குள்  அதிமுக சென்றுவிட்டது’ சென்னை: பாஜக-வின் பிடிக்குள் அதிமுக சென்றுவிட்டது; அதி முகவை நினைத்து கவ லைப்படுகிறோம் என திரு மாவளவன் தெரிவித்து உள்ளார். தேசிய ஜன நாயக கூட்டணி அதிமுக தலைமையில்தான் இயங்குகிறது என்று கூற முடியாத நிலை உள்ளது. தலைமையைகூட கூற முடியாத நிலையில், இது அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் என்று கூறி யுள்ளார்.

2 நாட்களுக்கு மழை தொடரும்

சென்னை: தென்னிந் திய பகுதிகளின் மேல் ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், கட லோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழ கத்தில் ஓரிரு இடங்களி லும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திரு வண்ணாமலை, விழுப்பு ரம், கள்ளக்குறிச்சி, கட லூர், சேலம், நாமக்கல்,  தஞ்சாவூர், இராமநாத புரம் ஆகிய மாவட்டங்க ளில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.