இலங்கை கடற்படை சிறைப்பிடித்த மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம்
10 Nov 2025, 2:46 pm
<p><strong>இலங்கை கடற்படை சிறைப்பிடித்த மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம்</strong></p>
<p>சென்னை, நவ.10- மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு திங்களன்று கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும், 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த நீண்ட காலப் பிரச்சனைக்குத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் உயிர்ப்பிக்கவும், இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நீடித்த தீர்வை அடைய ஒருங்கிணைந்த முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
