சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
21 Mar 2026, 2:42 pm
<p><strong>சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை</strong></p>
<p>சென்னை, மார்ச் 21- ஏப்ரல் 23 அன்று தமிழகத்தில் சட்ட மன்றப் பொதுத்தேர்தல் நடைபெற வுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடு கள் தீவிரமடைந்துள்ளன. இதனிடையே, தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து தலைமை தேர்தல் அதி காரி அர்ச்சனா பட்நாயக் சனிக்கிழமை மார்ச் 21 விரிவான ஆலோசனை நடத்தினார். 72 ஆயிரம் வாக்குச் சாவடி மையங்கள் குறிப்பாக, தமிழகத்தில் 72,032 வாக்குச்சாவடி மையங்களும் 41 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்படவுள்ளன. வாக்குச்சாவ டிகளில் மேற்கொள்ள உள்ள பாது காப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை ஒருங்கிணைப்பு அதி காரிகளுடன் தலைமை தேர்தல் அதி காரி ஆலோசனை மேற்கொண்டார். ஐந்து அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடி களை அடையாளம் காண்பது, துப்பாக்கி ஏந்திய காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, துணை ராணுவப் படையினரை எந் தெந்த பகுதிகளில் பணியமர்த்துவது மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங் களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்தும் விரிவான கலந்தாய்வு நடைபெற்றது. சிஆர்பிஎப் ஒருங்கிணைப்பு அதி காரி மற்றும் தமிழ்நாடு காவல் ஒருங்கி ணைப்பு அதிகாரி உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். துணை ராணுவத்தினர் 20 ஆயிரம் பேர் வருகை சட்டமன்றத் தேர்தலுக்கான பாது காப்பு பணிக்காக தமிழ்நாட்டிற்கு 300 கம்பெனி துணை ராணுவப் படை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடவுள்ள னர். ஏற்கெனவே 50 கம்பெனிகள் வந்துள்ள நிலையில், மீதமுள்ள 250 கம்பெனிகள் விரைவில் வரவுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தலுக் கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30 துவங்கி ஏப்ரல் 6 வரை நடைபெற உள்ளது. ஏப்ரல் 7 அன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஏப்ரல் 9-ஆம் தேதிக்குள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடை பெறுகிறது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகின்றன.</p>
