தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

10 Dec 2025, 4:08 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தலைமை தேர்தல்  அதிகாரி ஆலோசனை

சென்னை: சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து டிசம்பர் 10 அன்று தலைமை தேர்தல் அதிகாரி  அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தினார். பாது காப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு  பணிகள் குறித்து 15 துறைகளுடன் ஆலோசனை நடத்தினார். காவல்துறை, சி.ஆர்.பி.எப், ரயில்வே, விமானப் போக்குவரத்து, வருமானவரித்துறை உள்ளிட்ட  அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடை முறைகள் உள்ளிட்டவை குறித்து தலைமை தேர்தல் அதி காரி விரிவாக ஆலோசித்துள்ளார்.

லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

சென்னை: உயர்த்தப்பட்ட எப்.சி. கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் லாரிகள் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன. இதனால், சென்னை துறைமுகம், காட்டுப்பள்ளி  துறைமுகத்தில் 95 சதவிகித கனரக வாகனங்கள் ஓடாத தால் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. ராயபுரத்தில் துறைமுக கண்டெய்னர் டாரஸ் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங். சார்பில் போட்டியிட விருப்ப மனு: அவகாசம் நீட்டிப்பு

சென்னை: 2026 சட்டப்பேர வைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில்  போட்டியிட விரும்பும் உறுப்பினர்களி டமிருந்து விருப்ப மனு பெறும் கால  அவகாசம், டிச.31 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.  தமிழக காங்கிரஸ் கமிட்டித்  தலைவர் கு. செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், 234 சட்ட மன்றத் தொகுதிகளுக்கும் கட்டண மில்லா விருப்ப மனு, டிசம்பர் 10 முதல்  15 வரை பெறப்படும் என்று முன்ன தாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப  மனு படிவங்களை தமிழ்நாடு காங்கி ரஸ் கமிட்டியிலோ அல்லது மாவட்ட காங் கிரஸ் கமிட்டியிலோ சமர்ப்பிக்க கடைசி  நாள் டிச.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு படிவங்களை சத்தியமூர்த்தி பவன் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலு வலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

எஸ்ஐஆர் பணி: அதிமுக பொதுக்குழு வரவேற்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் புதன்கிழமை (டிச.10) சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சுமார் 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதற்கு பொதுக்குழு அங்கீகாரம் அளித்துள் ளது. தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அதிமுக-வே தலைமை தாங்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.  கூட்டணி குறித்து முடிவு செய்யவும், கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து முடிவு  செய்யவும் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது.  எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை அதிமுக வரவேற்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவைத் தலைவர் தமிழ் உசேனுக்கு திடீர் உடல்நலக் குறை பாடு ஏற்பட்டதால், தற்காலிக அவைத் தலைவராக முன்னாள்  அமைச்சர் கே.பி. முனுசாமி நியமிக்கப்பட்டு அவர் தலைமை யில் கூட்டம் நடைபெற்றது.  பொதுக்குழு கூட்டம் தொடங்கும் முன்பாக நுழைவு வாயிலில்  லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  ஒருசிலர் தடுமாறி கீழே விழுந்து பிறகு, எழுந்து சென்றனர். இந்த நிகழ்வால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் ராகுல் காந்தி நடைபயணம்?

சென்னை: சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட் டில் நடைப்பயணம் மேற்கொள்ள மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் தமிழ் நாட்டுக்கு வருகிறார் ராகுல் காந்தி. ராகுலின் பாதயாத்திரை, பிரி யங்காவின் பேரணிக் கான பணிகளை ஒருங் கிணைக்க நிர்வாகி கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவை மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அமைத்து அறிவித்து உள்ளார்.

ஆர்.எஸ். பாரதி  விமர்சனம்

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் பயத்தை மறைக்க போடப்பட்ட மேக் - அப்தான் அதிமுக பொதுக்குழு என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வியையே மக்கள் பரிசாக தருவார்கள் என்றும் திமுக அமைப் புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி தெரிவித் துள்ளார்.  நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்று பாஜக அரசுக்கு கோரிக்கை வைக்கக் கூட எடப் பாடிக்கு துணிவில்லை என்றும் அவர் விமர்சித் தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.