தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புற்றுநோய் பாதிப்பால் வந்த விழிப்புணர்வு நுண்கீரை வளர்ப்பில் சாதனை படைக்கும் சிதம்பரம் பட்டதாரி பெண்!

13 Aug 2026, 12:28 am
புற்றுநோய் பாதிப்பால் வந்த விழிப்புணர்வு  நுண்கீரை வளர்ப்பில் சாதனை படைக்கும் சிதம்பரம் பட்டதாரி பெண்!

புற்றுநோய் பாதிப்பால் வந்த விழிப்புணர்வு நுண்கீரை வளர்ப்பில் சாதனை படைக்கும் சிதம்பரம் பட்டதாரி பெண்!

சிதம்பரம், ஆக.12-குடும்பத்தில் ஏற்பட்ட புற்றுநோய் இழப்பைச் சமூக நலனுக்கான முயற்சியாக மாற்றி, நுண்கீரை வளர்ப்பில் ஈடுபட்டு மாதம் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் வருமானம் ஈட்டி வருகிறார் சிதம்பரம் உசுப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண் காயத்ரி (35).

இவரது தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவருமே எவ்வித தீய பழக்கங்களும் இன்றிப் புற்றுநோயால் உயிரிழந்தனர். உணவுப் பழக்கவழக்கமே இதற்குக் காரணம் என மருத்துவர்கள் கூறியதையடுத்து, இயற்கை உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் குறித்துத் தேடத் தொடங்கினார். அப்போது ‘மைக்ரோ கிரீன்ஸ்’ எனப்படும் நுண்கீரைகளின் அபரிமிதமான மருத்துவக் குணங்களை அறிந்துகொண்டு, பயிற்சி பெற்றுத் தனது வீட்டிலேயே வளர்க்கத் தொடங்கினார்.

தற்போது பச்சைப்பயறு, உளுந்து, கொண்டைக்கடலை, முள்ளங்கி, ப்ரோக்கோலி உள்ளிட்ட பல்வேறு வகை நுண்கீரைகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். குழந்தைகளுக்குச் சாதாரணக் கீரைகளை விட நுண்கீரைகளைச் சாலட் மற்றும் சாதத்தில் கலந்து கொடுப்பது எளிது எனக் கூறும் காயத்ரி, வாடிக்கையாளர்களுக்கு வீடுகளிலேயே நுண்கீரை வளர்க்கும் இலவசப் பயிற்சியையும் அளித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பு வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகவே இதைத் தொடங்கினேன். வருமானத்தோடு மனநிறைவும் கிடைக்கிறது. தமிழக அரசு நுண்கீரை வளர்ப்பு திட்டத்தைக் கிராமப்புற பெண்களுக்கும் விரிவுபடுத்தி, சத்துணவு திட்டத்திலும் இக்கீரைகளைச் சேர்க்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

இயற்கை உணவின் அவசியத்தை உணர்த்தி வரும் காயத்ரியின் இம்மாற்றத்தை இயற்கை ஆர்வலர்களும் தோட்டக்கலைத்துறையினரும் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.