சிதம்பரம் வீனஸ் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்
17 Jul 2026, 12:32 am
<p><strong>சிதம்பரம் வீனஸ் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்</strong></p><p>சிதம்பரம், ஜூலை 16– சிதம்பரம் வீனஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாள் ‘கல்வி வளர்ச்சி நாள்’ விழா வாகக் கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். விழாவில் வீனஸ் கல்விக் குழு மத்தின் நிறுவனர் எஸ்.குமார், தாளாளர் அ.ரூபி யாள்ராணி, நிர்வாக இயக்குநர் வி.அருண் மற்றும் தலைவர் அ.லியோனா ஆகியோர் கலந்து கொண்டு, காமராஜரின் கல்விப் புரட்சி மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினர். நிகழ்ச்சியில் காமராஜர் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, கல்வி வளர்ச்சி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், காம ராஜரைப் போற்றும் வகையிலான பேச்சுப் போட்டி களும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாண வர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.</p>
