வீனஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா
4 hours before

வீனஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா

சிதம்பரம், நவ. 14-சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

பள்ளியின் நிறுவனர் வீனஸ் எஸ். குமார் தலைமை தாங்கினார். தாளாளர் ஏ. ரூபியாராணி, நிர்வாக இயக்குநர் வி. அருண், தலைவர் டாக்டர் கு. லியோனாஅருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, நேருவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் எச். கிருஷ்ணராஜ் மற்றும் நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் பொனிகலா செய்திருந்தனர்.