சிதம்பரம் வீனஸ் பள்ளி 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி
22 May 2026, 1:43 am
<p><strong>சிதம்பரம் வீனஸ் பள்ளி 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி</strong></p><p>சிதம்பரம், மே 21 - சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் ஆர்.மிதுன் 493 மதிப்பெண்கள் பெற்று சிதம்பரம் நகர அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். மாணவி ஆர். ஐஸ்வர்யா 492 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி ஆர். சரிஹாஸ்ரீ 490 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். மேலும், 450 மதிப்பெண் களுக்கு மேல் 54 மாணவர் களும், 400 மதிப்பெண்க ளுக்கு மேல் 117 மதிப்பெண் கள் பெற்று பள்ளியின் கல்வித் திறமையை வெளிப் படுத்தியுள்ளனர். மேலும் கணிதத்தில் 2 பேரும், அறிவியலில் 2 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர் .தமிழ் பாடத்தில் 90-க்கு மேல் 63 பேரும், ஆங்கிலத் தில் 84, கணிதத்தில் 40 அறிவியலில் 59, சமூக அறிவியலில் 93 மாணவர்கள் 90-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பள்ளியின் நிறுவனர் வீனஸ் எஸ்.குமார், தாளாளர் ஏ.ரூபியால் ராணி, இயக்குநர் வி.அருண், தலை வர் டாக்டர் கு.லியோனா மற்றும் பள்ளி முதல்வர் பி.அக்கினிவீரபத்திரன் ஆகியோர் பாராட்டுகளை யும் வாழ்த்துகளையும் தெரி வித்தனர். மேலும் மாண வர்களின் வெற்றிக்காக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப் பட்டது.</p>
