வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்
11 Jun 2026, 11:27 pm
<p><strong>வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்</strong></p><p>சிதம்பரம், ஜூன் 11: சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. உதவி ஆட்சியர் (பொறுப்பு) தனலட்சுமி முன்னிலையில் வட்டாட்சியர் ஹரிதாஸ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். ஜமாபந்தியின் முதல் நாளில் பூதங்குடி, சி.சாத்தமங்கலம் உள்ளிட்ட ஒரத்தூர் உட்கோட்டத்தைச் சேர்ந்த 13 கிராம மக்களின் மனுக்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஜமாபந்தி வருகிற 25-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்</p>
