தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிதம்பரத்தில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

yesterday
சிதம்பரத்தில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்
<p><strong>சிதம்பரத்தில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்</strong></p><p>சிதம்பரம், ஜூலை 22- சிதம்பரம் நகராட்சி சுகாதாரத்துறை சார்பில், தமிழ்நாடு அரசின் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் விளங்கியம்மன் கோயில் அருகில் புதன்கிழமை நடை பெற்றது. நகராட்சிப் பகுதிகளில் பணிபுரியும் அனைத்துத் தூய்மைப் பணியாளர்கள், சாக்கடை மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்வோர், பாதாளச் சாக்கடை பணியாளர்கள், பொதுக்கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யும் பணியாளர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம் நடத்தப்பட்டது. நகராட்சி ஆணையாளர் த. மல்லிகா தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தார். முகாமில், நகரமன்ற துணைத் தலைவர் எம். முத்துக்குமார் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.சி. மணிகண்டன், சி.க. ராஜன், அப்பு சந்திரசேகர், அசோகன், கல்பனா சண்முகசுந்தரம், தஸ்லீமா, தாரணி அசோக், புகழேந்தி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்முகாமில் தாட்கோ, வருவாய்த்துறை, திறன் மேம்பாடு, குடும்ப நலன், மருத்துவப் பரிசோதனை மற்றும் சமூக நலத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. பெருவாரியான தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பெற்றதுடன், புதிய நலத்திட்டங்களுக்கும் விண்ணப்பித்து மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கோண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளைச் சுகாதார அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் அரவிந்தன் மற்றும் பொது சுகாதாரப் பிரிவு பணியாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.