தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

22 May 2026, 1:29 am
நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில்  வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
<p><strong>நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு</strong></p><p>சிதம்பரம், மே 21- சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட 33வது வார்டு இந்திரா நகர் முத்தையன் வாய்க்கால் கரையில், கடந்த 50 ஆண்டு களுக்கும் மேலாக 20க்கும் மேற்பட்ட அடித்தட்டு குடும்பங்கள் வீடுகள் கட்டி வசித்து வருகிறார்கள். தாங்கள் வசிக்கும் இப்பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று நீதிமன்றம் கூறியதாகக் குறிப்பிட்டு, அதனை அகற்றுவதற்குப் பொதுப்பணித் துறையினரும் வருவாய்த் துறையினரும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்தச் சூழ்நிலையில், கடந்த மே 20 தேதி வீடுகளை இடித்து அகற்றுவதற்காக அதிகாரிகள் பொக்லின் இயந்திரத்துடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தனர். இதை யறிந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து அதிகாரிகளின் நடவடிக்கைக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மக்களின் தற்போதைய நிலையை விரிவாக எடுத்துரைத்தார். மேலும், மக்கள் வீடுகளைக் காலி செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், ஜூன் 3ஆம் தேதி வரை தற்காலிகமாகப் பொதுமக்களுக்குக் கால அவகாசம் வழங்கியுள்ளார். இந்த இடைப்பட்ட கால அவகாசத்தைப் பயன்படுத்தி, தாங்கள் குடியிருக்கும் இடம் வாய்க்கால் ஆக்கிர மிப்பு இல்லை என்பதை நீதிமன்றத்திற்குச் சென்று சட்டப்பூர்வமாக உறுதி செய்ய உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.