சிதம்பரம் ரயில் நிலைய வாயில் மது கடை மூடப்பட்டது பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
16 May 2026, 2:01 am
<p><strong>சிதம்பரம் ரயில் நிலைய வாயில் மது கடை மூடப்பட்டது பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்</strong></p><p>சிதம்பரம், மே 15 – பேருந்து நிலையம், பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம் வழிபாட்டு தளங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிதம்பரம் ரயில் நிலைய வாயிலில் உள்ள டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கும் ரயில் பயணிகளுக்கும் பல ஆண்டுகளாக இடையூறாக இருந்து வந்தது. அதை அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் புதன்கிழமை முதல்வ ரின் உத்தரவை அடுத்து சிதம்பரம் பேருந்து நிலைய வாயிலில் இருந்த கடை மூடப் பட்டது. ஆனால் ரயில் நிலைய வாயிலில் உள்ள கடை மூடாமல் இருந்தது. இதனை சுட்டிகாட்டி தீக்கதிர் நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் அந்த கடையை மாவட்ட நிர்வாகம் மூடியுள்ளது. இதனை வரவேற்று சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் தலைமையில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் மாரியப்பன், அகோரம், சமூக ஆர்வலர் தில்லை சீனு மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதே போல் அண்ணாமலை பல்கலைக்கழகம் செல்லும் வழியில் மேம்பாலத்திற்கு கீழ் இயங்கிய டாஸ்மாக் கடையும் மூடப்பட்டது. இதனையும் பொதுமக்கள் வரவேற்று முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.</p>
