தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிதம்பரத்தில் ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்

14 hours before
சிதம்பரத்தில் ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்

சிதம்பரத்தில் ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்

சிதம்பரம், அக் 30-சிதம்பரத்தில் ரயில்வே தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில் நிலைய முற்றுகை போராட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் ஜன சதாப்தி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். ராமேசு வரத்தில் இருந்து அயோத்தி வரை இரு வழித்தடங்களிலும் வாராந்திர ரயிலாக இயக்கப்படும் ஷ்ரத்தா சேது விரைவு ரயிலுக்கு சிதம்பரத் தில் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் இதனை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலையிலிருந்து ரயில் பயணிகள் சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் நிர்வாகிகள் ஊர்வலமாக புறப்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்தனர் இவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனை தொடர்ந்து ரயில் நிலைய வாயிலில் அனைவரும் கீழே அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன்அன்சாரி, மாவட்டச் செயலாளர் தமிழ்வளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் எஸ். ஜி. ரமேஷ் பாபு, முன்னாள் மாநில குழு உறுப்பினர் மூசா, சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொருளாளர் எஸ் எஸ் பாலாஜி, விசிக மண்டல செயலாளர் வ.க. செல்லப்பன், விசிக மாநில செயலாளர் பால அறிவாழி, திமுக மாவட்ட பொறியாளர் அணி தலைவர் அப்பு சந்திரசேகர், நகர துணை செயலாளர் ஆர் இளங்கோ, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தில்லை ஆர். மக்கீன், மாவட்ட துணை தலைவர் ராஜா சம்பத் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் வி.எம்.சேகர், வட்ட செயலாளர் தமிமுன்அன்சாரி, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஜஹிர்,மாநில மாணவரணி தலைவர் பைசல், ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் அப்துல் ரியாஸ், சிவராம வீரப்பன் முத்து, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரஜினிகாந்த், பாமக மாநில நிர்வாகி சஞ்சீவி, இந்திய மாணவர் சங்கம் மாவட்ட தலைவர் பூபதி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் அமைப்புகளை சார்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.