ரயில் நிலைய முற்றுகை போராட்டம் அனைத்து கட்சிகள் ஆலோசனை
28 Oct 2026, 1:03 am

ரயில் நிலைய முற்றுகை போராட்டம் அனைத்து கட்சிகள் ஆலோசனை

சிதம்பரம், அக்.27-சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ள ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் தேரடி தெருவில் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் இருந்து கோயம் புத்தூர் வரை இயக்கப்படும் ஜனசதாப்தி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும், ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரை இரு மார்க்கங்களிலும் வாராந்திர ரயிலாக இயக்கப்படும் சேது விரைவு ரயில் சிதம்பரம் ரயில் நிலை யத்தில் நின்று செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, நகராட்சி துணைத் தலைவர் முத்துக்குமரன், சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கத்தைச் சேர்ந்த அப்துல் ரியாஸ், சிவராம வீரப்பன், அதிமுக சார்பில் முத்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செய லாளர் தமிழ்வளவன், ஆதிமூலம், மனித

நேய ஜனநாயக கட்சியின் மாணவரணி மாநிலச் செயலாளர் பைசல் , ஜனநாயக கட்சி சாகுல், மாதர் சங்கம் அமுதா, இந்திய மாணவர் சங்கத்தின் சிவநந்தினி, குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் அம்பிகாபதி, கலியமூர்த்தி, சிவராமன், பாமக கார்த்திகேயன், மதிமுக பார்த்தி பன், குமார், வாசிப்பு மேம்பாட்டு இயக்கம்

முத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், வரும் 30ஆம் தேதி நடை பெற உள்ள சிதம்பரம் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தை அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் பெரிய அளவில் வெற்றிகரமாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.