டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்!
29 Oct 2026, 11:45 pm

டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்!

சிதம்பரம்,அக்.29-சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பவர் பிளான் நகரில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு எதிரே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வலி யுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது.

இந்த டாஸ்மாக் கடையால் வண்ணாரப்பாளை தெரு பகுதி மற்றும் சுற்றுவட்டப்பகுதிகளில் உள்ள பொது மக்களும், பள்ளி மாணவர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், கடைக்கு மது அருந்த வரு பவர்கள் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

எனவே, இந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து வந்தனர். இருப்பினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் விஜய் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினர் அம்சயாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், வேல்முருகன், பாண்டியன், தனசேகர், வாசுதேவன், அசன் முகமது மற்றும் கிராமத் தலைவர்கள் செல்வம், பக்தவச்சலம் உள்ளிட்ட ஆண்கள் பெண்கள் எனஅப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட வந்தனர். அவர்களை சிதம்பரம் உதவி

காவல் கண்காணிப்பாளர் (ஏ.எஸ்.பி.)சத்ரிய கவின் தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில், வரும் ஜனவரி மாதத்திற்குள் அந்த இடத்தில் இருந்து டாஸ்மாக் கடையை காலி செய்து இடமாற்றம் செய்வது என்றும், அவ்வாறு செய்ய முடியாதபட்சத்தில் கடையை மூடுவது குறித்த நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.