தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிதம்பரம் பழைய பேருந்து நிலைய கட்டுமானப் பணி மந்தம்! பயணிகள் கடும் அவதி

13 May 2026, 11:52 pm
சிதம்பரம் பழைய பேருந்து நிலைய கட்டுமானப் பணி மந்தம்!  பயணிகள் கடும் அவதி

சிதம்பரம் பழைய பேருந்து நிலைய கட்டுமானப் பணி மந்தம்! பயணிகள் கடும் அவதி

​​​​​​​சிதம்பரம், மே 13- சிதம்பரம் நகரின் மையப்பகுதி யில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால், கடும் போக்குவரத்து நெரிசலும் இடர்பாடுகளும் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிதம்பரம் பழைய பேருந்து நிலையக் கட்டிடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலானதால், அது முற்றிலும் பழுதடைந்து சிதில மடைந்தது.

கடந்த காலங்க ளில் கட்டிடத்தின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து பயணிகள் பலர் காயமடைந்தனர்.

இதையடுத்து, ஆபத்தான நிலை யில் இருந்த இக்கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய பேருந்து நிலைய வளாகம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று, கடந்த ஓராண்டுக்கு முன்பு பழைய பேருந்து நிலையக் கட்டி டம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.

தொடர்ந்து, பயணிகளின் வசதிக்காக ரூ. 5 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய நிழற்குடை மற்றும் உள்கட்டமைப்பு வசதி கள் அமைக்கும் பணிகள் தொடங்கப் பட்டன.

ஆனால், பல்வேறு கார ணங்களால் தற்போது கட்டு மானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இ

தனால், பேருந்துகள் நிலையத்திற்குள் வந்து செல்வதில் கடுமையான சிரமம் ஏற்பட்டுள்ளது.

போதிய இடவசதி இல்லாததால் பேருந்து நிலைய வளாகத்திற்குள் தினசரி கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கட்டுமானப் பணிகள் இழுபறி யாக உள்ள நிலையில், இரவு நேரங்களில் இப்பேருந்து நிலை யம் சமூக விரோதிகளின் புகலிட மாக மாறியுள்ளது.

இரவு நேரப் பயணிகள், குறிப்பாகப் பெண்கள், அவசரத் தேவைகளுக்காகச் செல்லும்போது அங்கு மறைந்தி ருக்கும் போதை ஆசாமிகள் அவர்க ளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதோடு, நகை மற்றும் பணத்தைப் பறித்துச் செல்லும் அவலமும் தொடர்கிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற வெளியூர் பெண் ஒருவரிடம் போதை ஆசாமி ஒருவர் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கடைக்காரர்கள் ஓடி வந்து அந்நபரைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் வெளியூர் என்பதால் புகார் அளிக்காமல் சென்றுவிட்டனர்.

எனவே, மாவட்ட நிர்வாகமும் நகராட்சி அதிகாரிகளும் தலை யிட்டு, தொய்வடைந்துள்ள பழைய பேருந்து நிலையப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இரவு நேரங்களில் பேருந்து நிலைய வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.