தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிதம்பரம் நேரு நகர் ஆக்கிரமிப்பு விவகாரம் வீடுகளை இடிப்பதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

3 Dec 2025, 2:59 pm
சிதம்பரம் நேரு நகர் ஆக்கிரமிப்பு விவகாரம்   வீடுகளை இடிப்பதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
<p><strong>சிதம்பரம் நேரு நகர் ஆக்கிரமிப்பு விவகாரம் &nbsp; வீடுகளை இடிப்பதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு</strong></p> <p>சிதம்பரம், டிச.3- &nbsp;சிதம்பரம் நகரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், 33-வது வார்டு நேரு நகர் பகுதியில் &lsquo;ஆக்கிரமிப்பு&rsquo; என்ற பெயரில் ஏழை மக்களின் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எஸ்.ராஜா கூட்டத்திற்குத் தலைமை தாங்கி னார். இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, சி.பி.ஐ., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மாதர் சங்கம் உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சிகள் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். &nbsp;தீர்மானங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஏற்கெனவே வீடுகளை இழந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குச் சிதம்பரம் நகரப் பகுதிகளிலேயே உடனடி யாக மாற்று இடம் வழங்க வேண்டும், நேரு நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஆக்கிரமிப்பு எனக் கூறி தனிநபர்கள் நீதிமன்ற உத்தரவு பெற்று வீடுகளை இடிப்பதற்கு எதிராக, பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்து காப்பாற்ற வேண்டும், வீடுகளை அகற்று வதைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பிலும் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது, கூட்டணிக் கட்சிகளின் சார்பில், சிதம்பர நகர மக்களின் பாதுகாப்புக் குழு என்ற பெயரில் ஒரு ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மூலம் தமிழக முதல்வரை சந்தித்து வழங்குவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.