தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள்உயர் நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் ஆய்வு

12 Aug 2026, 12:56 am
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள்உயர் நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் ஆய்வு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள்உயர் நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் ஆய்வு

சிதம்பரம், ஆக. 11–சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதி பெறாமல் புதிய கட்டுமானப் பணிகள், பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்டபல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அவற்றுக்குத்தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும், சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெமினிராதா என்பவராலும் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கு தொடர்பாகப் பிறப்பித்த உத்தரவில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் முறையான அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதுகுறித்து அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை, தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற இணை ஆணையர் நம்பிராஜன் தலைமையில் தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சிதம்பரம் நடராஜர்கோயிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, கோயிலில் முறையான அனுமதியின்றி கேரள பாணியில் தீட்சிதர்களுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதையும், பழமையான கோயில் கட்டடங்களுக்கு அருகிலும்,கோபுரங்களை இணைத்தும் புதியகட்டடங்கள் மற்றும் சிறு சிறுகோயில்கள் அமைக்கப்பட்டுள்ளதையும், பல்வேறு இடங்களில் புதியகோயில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மேலும், நடராஜர் நடனமாடியதாகக் கூறப்படும் நாட்டிய அரங்கம்அகற்றப்பட்டு அப்பகுதியில்கோசாலை அமைக்கப்பட்டுள்ளதையும், கோயிலில் உள்ள பழமைவாய்ந்த முக்கிய கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர். அதேவேளையில், புதிய கட்டுமானப்பணிகள் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து தீட்சிதர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்து, அவற்றைப் புகைப்படங்கள் மற்றும்வீடியோக்களாகப் பதிவு செய்துகொண்டனர்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆய்வுவிவரங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாகத் தற்போது கருத்து தெரிவிக்க இயலாது என்றும்அவர்கள் கூறினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.