12 ஆண்டாக வருமானக் கணக்கை தாக்கல் செய்யாத தீட்சிதர்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்காணிப்பில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம்! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
30 Oct 2026, 8:57 pm

12 ஆண்டாக வருமானக் கணக்கை தாக்கல் செய்யாத தீட்சிதர்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்காணிப்பில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம்!

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக். 30 -கடந்த 12 ஆண்டுகளாக, கோவிலுக்கு வந்த வருமானம் குறித்த முழுகணக்கை பொது தீட்சிதர்கள் சமர்ப்பிக்கவில்லை எனவும், கோவிலை பொது தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்கவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

இதனடிப்படையில், சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தைக் கண்காணிக்க உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோரை நியமித்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.சிதம்பரம் நடராசர் கோவிலில் கனகசபை மீதேறி, பக்தர்கள் தரிசனம்செய்ய அனுமதித்து, தமிழக அரசுபிறப்பித்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் உள்ளிட்டோர் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதேபோல, அரசாணைக்கு ஆதரவு தெரிவித்தும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும்இ. மனோகரன் அடங்கிய அமர்வு, கோவிலின் நிர்வாகத்தை தீட்சிதர்களிடம் ஒப்படைத்து கடந்த 2014-ஆம்ஆண்டு உத்தரவு பிறப்பித்த பிறகு, கோவில் முறையாக நிர்வகிக்கப்பட வில்லை; கோவிலுக்குள் பொது தீட்சிதர்கள் மேற்கொண்ட தொடர் கட்டுமானங்களால் புராதன கட்டடங்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள் ளது எனக் கூறியதுடன், கடந்த 12 ஆண்டுகளாக, கோவிலுக்கு வந்த வருமானம் குறித்த முழு கணக்கைபொது தீட்சிதர்கள் சமர்ப்பிக்க வில்லை என்றும் குறிப்பிட்டனர்.

அத்துடன் நிர்வாகத்தைக் கண்காணிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோரை முறையே தலைவர் மற்றும் துணைத் தலைவராகவும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரனை உறுப்பினராகவும், பொது தீட்சிதர்கள் சங்கத்தின்செயலாளர், இந்துசமய அறநிலை யத்துறைச் செயலாளர் ஆகியோரை அலுவல் சாரா உறுப்பினர்களாகநியமித்தும் உத்தரவிட்டனர்.

இந்த நிர்வாகக் குழுவினர், கோவிலின் புராதனக் கட்டடங்களுக்கு இடையூறாக அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள தேவையற்ற கட்டடங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு புராதனச் சின்ன ஆணையத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துகளை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கோவிலின் சொத்துகளைக் கணக்கெடுத்து மாயமான மதிப்புமிக்க பொருட்களை மீட்கவும், கோவில் சொத்துகளின் வாடகைகுத்தகை பாக்கியை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.கோவிலின் கனகசபையில் நின்று அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யவும், தேவாரம், திருவாசகம் பாடவும் சமவாய்ப்பு வழங்குவதை நிர்வாகக் குழு உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.