நீதியின் நிழலில்...
5 Nov 2026, 8:53 pm

நீதியின் நிழலில்...

கோவில் மற்றும் கோவில் நிலம் தொடர்புடைய நீதிமன்றங்களின் இரண்டு தீர்ப்புகள் கவனிக்கத்தக்கவையாக உள்ளன. சிதம்பரம்நடராஜர் கோவில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு அமைத்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மறுபுறம், கரூர்மாவட்டத்தின் கோவில்களுக்கு சொந்தமான 3,085 ஏக்கர் இனாம் நிலத்தை விவசாயிகளுக்கு பத்திரப் பதிவு செய்துகொடுப்பதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் பொதுதீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தொடர்ந்து இவர்களது நிர்வாகம் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக கோவில் நிர்வாகம் யாருக்கு உரியது என்பது குறித்து நீண்டநெடுங்காலமாக வழக்கு நடைபெற்றுவருகிறது. எத்தனை உத்தரவுகள் பெறப்பட்டாலும், தீட்சிதர்கள் தொடர்ந்துதங்களது கட்டுப்பாட்டிலேயே நிர்வாகத்தை தக்கவைத்து வருகின்றனர்.

கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ்ப் பண்ணிசையில் வழிபாடு நடத்த தடை விதிக்கும் தீட்சிதர்கள்அவ்வாறு பாடிய பக்தர்களை கொடூரமாக தாக்கிய நிகழ்வுகளும் நடந்துள்ளன. கோவிலுக்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்களை தீட்சிதர்கள் அவமதிக்கும் நிகழ்வுகள் நடந்துள்ளன. குழந்தைத்திருமண வழக்கம் தொடர்வது குறித்தும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அனைத்துக்கும் மேலாக கோவில் வரவு-செலவில் பல்வேறுகுளறுபடிகள், முறைகேடுகள் நடந்து வந்திருப்பது தெளிவாக இந்து சமய அறநிலையத் துறையால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில்தான் சிதம்பரம் கோவில் நிர்வாகத்தை கண்காணிக்க உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள்உள்ளிட்டோரைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்தக் குழுவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பல்வேறு வழக்குகள் ஆண்டுக்கணக்கில் தூங்கிக்கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய வழக்குகளில் மட்டும் மின்னல் வேகத்தில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வியப்பளிக்கிறது. இதே வேகம் பொது மக்கள்தொடர்புடைய அனைத்துவழக்குகளிலும் பின்பற்றப்பட்டால் நீதி பரிபாலனம் சிறக்கும்.

மற்றொரு வழக்கில் கரூர் மாவட்டத்தில் நான்கு கோவில்களுக்குச் சொந்தமான நிலம் என்று பதியப்பட்டிருந்த 3,084.95 ஏக்கர் இனாம் நிலத்தை உழவர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க இருந்த தடையை தவெக அரசு நீக்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இந்தத்தீர்ப்பை வரவேற்றது. இந்த நிலையில், பத்திரப்பதிவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோவில் இனாம் இடத்தை காலம் காலமாக உழவடை செய்து வரும்விவசாயிகளுக்கு நெடியபோராட்டத்திற்கு நிலம் கிடைத்தது மீண்டும் தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த இருவழக்குகளிலும் உரிய சட்ட நிபுணர்களைக் கொண்டுவாதிட்டு நீதியை நிலைநாட்டுவது அவசியம்.