தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நடராஜர் கோயில் தேர் திருவிழா பாலித்தின் திரை பிடித்து சாமியை மறைத்த தீட்சிதர்கள்

yesterday
நடராஜர் கோயில் தேர் திருவிழா  பாலித்தின் திரை பிடித்து சாமியை மறைத்த தீட்சிதர்கள்
<p><strong>நடராஜர் கோயில் தேர் திருவிழா பாலித்தின் திரை பிடித்து சாமியை மறைத்த தீட்சிதர்கள்</strong></p><p> சிதம்பரம், ஜூன் 21- சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சனத் தேர் திருவிழாவில், தீட்சிதர்கள் அல்லாதோர் வழிபடுவதைத் தடுக்க பிளாஸ்டிக் திரை பிடித்து சாமி சிலைகள் மறைக் கப்பட்ட சம்பவத்திற்குப் பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள் ளனர். இக்கோயிலில் கருவறையிலிருந்து சாமி சிலைகளைத் தேருக்கு எடுத்துச் செல்லும்போதும், மீண்டும் கொண்டு வரும்போதும் கீழ சன்னதியில் தமிழ் ஆர்வலர் பால சுப்பிரமணியம் என்பவர் தொன்றுதொட்டு தீபாராதனை காட்டி, உதிரி பூக்களைத் தூவி வழிபட்டு வருகிறார். இதற்குத் தீட்சிதர்கள் கடந்த சில ஆண்டுகளாக எதிர்ப்பு தெரி வித்து வரும் நிலையில், இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் பாலசுப்பிரமணியம் தீபாராதனை காட்டி வழிபட்டார். அப்போது, அவர் தூவும் பூக்கள் சாமி சிலைகள் மீது படாமல் இருக்க, தீட்சிதர்கள் பிளாஸ்டிக் திரை அமைத்துச் சிலைகளை மறைத்துக் கொண்டு சென்றனர். இதனால் கோயிலின் இடதுபுறம் நின்ற பக்தர்களால் சாமியைத் தரிசிக்க முடியவில்லை எனக் குற்றம்சாட்டினர். சாமி சிலைகளை மறைக்கக் கூடாது எனத் தெய்வீக பக்தர் கள் பேரவை தலைவர் ஜெமினி ராதா, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்தும் நட வடிக்கை எடுக்காததால் தீட்சிதர்கள் இச்செயலில் ஈடுபடுவ தாகவும், பொதுமக்கள் சூடம் ஏற்றி வழிபடுவதைத் தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் சமூக ஆர்வ லர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.