சிதம்பரம் நடராஜர் கோவிலில் சட்டவிரோத வசூல் வேட்டை பக்தர்கள் அமரும் இடத்தில் தீட்சிதர்களின் அநாகரிகம்
20 May 2026, 10:25 pm

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சட்டவிரோத வசூல் வேட்டை பக்தர்கள் அமரும் இடத்தில் தீட்சிதர்களின் அநாகரிகம்

சிதம்பரம், மே 20- சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் அமரும் இடங்களில் அநாக ரிகமான செயல்கள் அரங் கேறுவதாகவும், சட்டவிரோ தப் பண வசூல் நடைபெறு வதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள் ளன.

இதுகுறித்து தெய்வீக பக்தர்கள் பேரவையின் தலைவர் ஜெமினி ராதா, தமிழக முதலமைச்சருக்குப் புகார் மனு ஒன்றை அனுப் பியுள்ளார்.

அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குத் தமிழகம் மட்டுமன்றி, வெளிமாநிலங் களில் இருந்தும் நாள்தோ றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்ற னர்.

குறிப்பாக, கோவிலில் உள்ள கனகசபையின் மீது ஏறி, சுவாமிக்கு மிக அருகில் நின்று தரிசனம் செய்யப் பக்தர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கனகசபைக்கு முன்பாக வரி சையாக உள்ள தூண்களின் இடுக்குகளில் பக்தர்கள் யாரும் அமரக் கூடாது என்ப தற்காகத் தீட்சிதர்கள் அங் கெல்லாம் எண்ணெய்யை ஊற்றியுள்ளனர்.

இதற்குப் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தங்க ளுக்கு இணையாகப் பொது மக்களும் அந்த இடத்தில் அமர்கிறார்களே என்ற தீய எண்ணத்துடனும், சாதிய வன்மத்துடனும் தீட்சிதர்கள் எண்ணெய் ஊற்றிப் பக்தர் களை அவமரியாதை செய்து ள்ளனர்.

மேலும், கனகசபை மீது ஏறி நடராஜரைத் தரிசனம் செய்வதற்காகப் பக்தர்க ளின் வசதியைப் பொறுத்து, ஒரு நபருக்கு 200 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை தீட்சிதர்கள் சட்ட விரோதமாகப் பணம் வசூ லித்து வருகின்றனர்.

பாரம் பரியமாகக் கனகசபையில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாகவே தரிசனம் செய்து வந்துள்ளனர்.

கனகசபையில் தரிசனம் செய்யப் பக்தர்களிடம் கட்டா யப் பணம் வசூல் செய்யக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவையும் மீறித் தீட்சிதர்கள் தன்னிச்சையாக வசூலில் ஈடுபட்டு வருகின்ற னர்.

இதன் மூலம் நாளொன் றுக்கு லட்சக்கணக்கான ரூபாயைப் பக்தர்களிடம் இருந்து தீட்சிதர்கள் கொள்ளையடிக்கின்றனர்.

இந்தப் பணத்திற்கு அவர்கள் எவ்விதக் கணக்கும் காட்டு வது இல்லை. எனவே, தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் இந்த விவகாரத் தில் உடனடியாகத் தலை யிட்டுப் பக்தர்களின் உரிமை களைப் பாதுகாக்க வேண்டும்.

மேலும், சட்ட விரோதமாக வசூலிக்கப் படும் தொகையைத் தடுத்து நிறுத்தவும், தீட்சிதர்களின் இந்த வசூல் வேட்டையைக் கண்காணிக்கவும் அறநிலை யத்துறை சார்பில் தனி அதி காரியை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள் ளார்.