சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழா ஆயிரங்கால் மண்டபத்தில் தள்ளுமுள்ளு செய்தியாளர்கள் மீது தாக்குதல்
yesterday
<p><strong>சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழா ஆயிரங்கால் மண்டபத்தில் தள்ளுமுள்ளு செய்தியாளர்கள் மீது தாக்குதல்</strong></p><p>சிதம்பரம், ஜூன் 22 - சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தரிசன விழா நடைபெற்ற ஆயிரங்கால் மண்டபத்திற்குள் பக்தர்களைக் கட்டுப்படுத்திய காவல்துறையினர், அவர்களை வரிசையாக அனுமதித்தனர். அந்த நேரத்தில், கோயிலின் தீட்சிதர்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்களைத் தனியாக அழைத்துச் செல்ல முயன்றனர். இதற்குத் தீட்சிதர்களில் மற்றொரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆயிரங்கால் மண்டப நுழைவு வாயிலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. பின்னர் காவல்துறையினர் தலையிட்டுச் சூழலைச் சரிசெய்து அனைவரையும் வரிசையாக அனுப்பி வைத்தனர். இதனிடையே, தரிசன விழாவைப் படம் பிடிக்க முயன்ற செய்தியாளர்களை, சாமி சிலையைப் படம் பிடிப்பதாகத் தவறாகக் கருதி, தீட்சிதர்கள் சிலர் அவர்கள் மீது வாழைக் காய்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குலுக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.</p>
