சிதம்பரத்தில் நந்தனார் சிலை வீதி உலா ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு கோலாகலம்
yesterday
<p><strong>சிதம்பரத்தில் நந்தனார் சிலை வீதி உலா ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு கோலாகலம்</strong></p><p>சிதம்பரம், ஜூன் 22 - சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு, 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் சிலை வீதி உலா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசன விழாக்களின் போது, நந்தனார் கோயிலிலிருந்து நந்தனார் உருவச்சிலை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுவது மரபாகும். அதன்படி, இந்த ஆண்டு ஆனித் திரு மஞ்சன விழாவையொட்டி நந்தனார் கல்விக்கழகம் சார்பில் இந்த ஊர்வலம் நடைபெற்றது. நந்தனார் கோயிலிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் சிதம்பரம் தெற்குச் சன்னதியை வந்தடைந்தது. அங்கு நந்த னார் கல்விக்கழகத் தலைவர் கே.ஐ. மணிரத்தினம் தலைமையில், மேள தாளங்கள் முழங்க ஊர்வலம் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர், நடராஜர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம், மீண்டும் நந்தனார் மடத்தை வந்தடைந்தது. கீழச் சன்னதியில் நந்தனாருக்குக் கோயில் தீட்சிதர்கள் சார்பில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. இந்த ஊர்வலத்தில் நந்தனார் கல்விக்கழகச் செயலாளர் திருவாசகம், பொருளாளர் டி. ஜெயச்சந்திரன், நிர்வாகிகள் கமல் மணிரத்தினம், அரவிந்த் மணிரத்தினம், நந்தனார் கழக டிரஸ்ட் செய லாளர் வினோபா மற்றும் மணிமொழி, தமிழரசன், கஜேந்திரன், கிருபாகரன், மணலூர் ரவி, இளைய அன்பழகன், பி. பன்னீர்செல்வம், கே. கனகசபை, டி. தெய்வசிகாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.</p>
