குறைந்த ஊதியம்: சிதம்பரம் எம்.எல்.ஏ-விடம் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் புகார்!
6 Nov 2026, 12:32 am

குறைந்த ஊதியம்: சிதம்பரம் எம்.எல்.ஏ-விடம் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் புகார்!

சிதம்பரம், நவ.5-சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரியிடம், மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தில் குறைந்த அளவே ஊதியம் வழங்கப்படுவதாகத் தொழி லாளர்கள் நேரில் புகார் தெரிவித்தனர்.

சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி தொடர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக புவனகிரி அருகே உள்ள அருண்மொழிதேவன் ஏரியை ஆய்வு செய்யச் சென்ற போது, ஆயிபுரம் கிராமத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணியில் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதனைக் கண்ட எம்.எல்.ஏ, தனது வாகனத்தில் இருந்து இறங்கி நேரில் சென்று தொழிலாளர்

களிடம் குறை கேட்ட றிந்தார். தினசரி ஊதியம்முறையாக வழங்கப்படு கிறதா என்று அவர் வின விய போது, "ஒரு வாரக் கடின உழைப்பிற்கு ரூ. 300 முதல் ரூ. 500 வரை மட்டுமே ஊதியமாகக் கிடைக்கிறது" எனத் தொழிலாளர்கள் வேதனையுடன் தெரி வித்தனர்.

தொழிலாளர்களின் புகாரைக் கேட்டறிந்த எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளின் கவ னத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார்.

இந்த ஆய்வின் போது திமுக பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகர், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலாளர் இப்ராஹிம், மாநில மாணவரணி செயலாளர் பைசல், மாநிலத் துணைச் செய லாளர் அமீது ஜெகபர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.