பயிர்கள் கருகுவதை தடுக்க வடக்குராஜன் வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
10 Oct 2026, 2:10 am

பயிர்கள் கருகுவதை தடுக்க வடக்குராஜன் வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

சிதம்பரம், அக் 9-சிதம்பரம் தொகுதி விவசாயிகளின் பயிர்கள் கருகுவதைத் தடுக்க, வடக்கு ராஜன் வாய்க்காலில் கூடுதலாகத் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் விவசாயப் பணி களுக்குப் போதிய தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்து, வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்திய மு. தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., விவசாயிகளின் நலன் கருதி வடக்கு ராஜன் வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.