தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வீடு இழந்தவர்களுக்கு விரைவில் அடுக்குமாடி குடியிருப்புகள் சிதம்பரம் எம்எல்ஏவிடம் ஆட்சியர் உறுதி

24 Sept 2026, 2:38 am
வீடு இழந்தவர்களுக்கு விரைவில் அடுக்குமாடி குடியிருப்புகள் சிதம்பரம் எம்எல்ஏவிடம் ஆட்சியர் உறுதி

வீடு இழந்தவர்களுக்கு விரைவில் அடுக்குமாடி குடியிருப்புகள் சிதம்பரம் எம்எல்ஏவிடம் ஆட்சியர் உறுதி

சிதம்பரம், செப்.23-சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி வீடுகள் அகற்றப்பட்டு சுமார் 8ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், வீடுகளை இழந்த 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்க ளுக்கு மாற்று குடியிருப்பு வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து வலியுறுத்தினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், லால்புரம் பகுதியில் சுமார் 55 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடி

யிருப்புகள் கட்டுவதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என தெரி வித்துள்ளார்.

இதன் மூலம் பல ஆண்டுகளாக மாற்று குடியிருப்புக்காக காத்திருக்கும் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் நிரந்தர குடியிருப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.