100 நாள் வேலைக்கான கூலி வழங்க கோரி மறியல்
9 Oct 2026, 1:41 am
<p><strong>100 நாள் வேலைக்கான கூலி வழங்க கோரி மறியல்</strong></p><p>சிதம்பரம், அக் 8–சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும்பொதுமக்கள் 200-க்கும் மேற்பட் டோர் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வரு கின்றனர். இவர்களுக்கு கடந்த 6வாரங்களாக பணியாற்றியதற்கான கூலி இதுவரை வழங்கப்பட வில்லை எனக் கூறப்படு கிறது.இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 20 பேரின் வங்கிக் கணக்கில் மட்டும் ஒரு நாள் கூலி ரூ.350-க்கு பதிலாகரூ.200 வீதம் கூலி வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், 100 நாள்வேலைக்கானநிலுவைத் தொகையை உடனடியாக அனைவருக்கும் வழங்கக் கோரி சிதம்பரம்–புவனகிரி புறவழிச்சாலையில்மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர காவல்துறையினர், கும ராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது, 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி யாற்றியதற்கான நிலுவை கூலித் தொகையை உரிய முறையில்கணக்கிட்டு, விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதியளித்தனர்.இதையடுத்து பொதுமக்கள் மறியல் போரா ட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிதம்பரம்–புவனகிரி புறவழிச் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>
