தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சம்பளம் கேட்டு கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் பணிந்த நிர்வாகம்–மாலையிலேயே சம்பளம் வரவு!

15 May 2026, 1:13 am
சம்பளம் கேட்டு கறுப்பு பேட்ஜ்  அணிந்து போராட்டம் பணிந்த நிர்வாகம்–மாலையிலேயே சம்பளம் வரவு!

சம்பளம் கேட்டு கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் பணிந்த நிர்வாகம்–மாலையிலேயே சம்பளம் வரவு!

சிதம்பரம், மே 14 - சிதம்பரம் அண்ணாமலை நகரில் இயங்கி வரும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தை வழங்கக் கோரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்குச் சென்றதைத் தொடர்ந்து, அன்றைய தினமே அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டது.

இக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி எனப் பல்வேறு பிரிவுகளில் 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களுக்குக் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் மே 14 வரை வழங்கப்படாமல் இருந்தது.

இதன் காரணமாக, கல்லூரி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வியாழனன்று (மே 14) கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்குச் சென்றனர்.

மேலும், இது குறித்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்தகட்டமாகப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.

ஊழியர்களின் இந்த அதிரடிப் போராட்டத்தை அடுத்து, மே 14 மாலை 6 மணி அளவில் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களின் வங்கி கணக்கிலும் அவர்களது ஏப்ரல் மாதச் சம்பளம் உடனடியாக வரவு வைக்கப்பட்டது.

இச்சம்பளத் தாமதம் குறித்து மருத்துவக் கல்லூரி வட்டாரத்தில் விசாரித்தபோது, "இங்கு பொதுவாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை அரசு ஆணைப்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது புதிய அரசு அமைந்துள்ளதால், இதற்கான அரசாணை வெளியிடுவதில் சிறிய காலதாமதம் ஏற்பட்டது.

இனிவரும் காலங்களில் இத்தகைய தற்காலிகப் பிரச்சனை இருக்காது" என்று விளக்கமளித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.