தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இளம்பெண்ணை அடித்துக் கொன்று உடல் எரிப்பு கடும் நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் வலியுத்தல்

13 hours before
இளம்பெண்ணை அடித்துக் கொன்று உடல் எரிப்பு கடும் நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் வலியுத்தல்

இளம்பெண்ணை அடித்துக் கொன்று உடல் எரிப்பு கடும் நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் வலியுத்தல்

சிதம்பரம், அக். 31-சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (34). பெயிண்டரான இவரது காதல் மனைவிசிவகாமி (30). இவர்களுக்கு 4-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், வெள்ளியன்று மதியம் (அக். 30) மதியம் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதுஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், மனைவி சிவகாமியை கடுமையாகத் தாக்கியதாகவும், இதில் அவர் உயிரிழந்ததாகவும்கூறப்படுகிறது.

இதையடுத்து, யாருக்கும் எந்த தகவலும் தெரிவிக்காமல், அன்று மாலை வாகனம் ஒன்றை வரவழைத்து சிவகாமியின் உடலை ரவிச்சந்திரன் மற்றும் அவரது தந்தை யாகப்பன் சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று எரித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை

யினர் சுடுகாட்டிற்கு இரவு சென்று 50 சதவீதம் எரிந்த உடலை கைப்பற்றினர்.

இதனிடையே அதேபகுதியில் பதுங்கி இருந்த ரவிச்சந்திரனையும் அவரது தந்தை யாகப்பனையும்(68) போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து மாதர் சங்க கடலூர் மாவட்ட செயலாளர் மல்லிகா வெளி யிட்டுள்ள அறிக்கையில், இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றுதெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.