முந்தய பக்கம்

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

1 Oct 2026, 2:07 am
டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிதம்பரம், செப்.30-சிதம்பரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்குதல் மற்றும் குப்பைகளைத் தரம் பிரித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவி அனிதாதீபக்குமார் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் சார் ஆட்சியர் (பொறுப்பு) எஸ். தனலட்சுமி, கலந்துகொண்டு டெங்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். இதில் சங்க நிர்வாகிகள் வரலட்சுமி கேசவன், சங்க ஆலோசகர் இந்திரா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிஏற்பாடுகளை சங்கப் பொருளாளர் சம்சாத்பேகம் செய்திருந்தார். சங்கச் செயலாளர் வேதா நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram