ஹோட்டல் உரிமையாளரின் கண்களில் மிளகாய் பொடி தூவி செயின் பறித்தவர் கைது
1 Jun 2026, 11:50 pm
<p><strong>ஹோட்டல் உரிமையாளரின் கண்களில் மிளகாய் பொடி தூவி செயின் பறித்தவர் கைது </strong></p><p>சிதம்பரம், ஜூன் 01- சிதம்பரம் வடக்கு வீதியில் இயங்கி வரும் ‘குமர விலாஸ்’ ஹோட்டலில், உணவு பார்சல் வாங்குவது போல் நடித்து உரிமையா ளரின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்கச் சங்கிலியைப் பறித்த வாலிபரை பொது மக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சிதம்பரம் வடக்கு வீதியில் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினர் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். ஞாயிறன்று இரவு சுமார் 10.45 மணியளவில் கார் ஒன்றில் வந்த வாலிபர், ஹோட்டலுக்குள் வந்து தோசை பார்சல் கேட்டுள்ளார். அப்போது கல்லா பெட்டியில் இருந்த ஜெயந்தியிடம் பணம் கொடுப்பது போல் அருகில் சென்ற அந்த வாலிபர், திடீரென தான் மறைத்து வைத்தி ருந்த மிளகாய் பொடியை ஜெயந்தியின் கண்களில் தூவியுள்ளார். கண்களில் எரிச்சல் அடைந்த அவர் நிலை குலைந்த நிலையில், அவரது கழுத்தில் இருந்த 20 கிராம் தாலிச் சங்கிலியை அந்த வாலிபர் அறுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். ஜெயந்தி கூச்சலிட் டதைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்து கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த வாலிபரை, பொதுமக்கள் சற்றும் அஞ்சாமல் விரட்டிச் சென்று பிடித்துக் காவல்துறையி டம் ஒப்படைத்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசார ணையில், பிடிபட்டவர் சேத்தியாதோப்பு அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சந்தோஷ்குமார் (45) என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்திய சிதம்பரம் காவல்துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறை யில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.</p>
