சிதம்பரத்தில் அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்கப்படும்: அமைச்சர் பெ.விஸ்வநாதன்
12 Jun 2026, 11:07 pm
<p><strong>சிதம்பரத்தில் அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்கப்படும்: அமைச்சர் பெ.விஸ்வநாதன் </strong></p><p>சிதம்பரம், ஜூன் 12- சிதம்பரம் நந்தனார் கல்விக் கழகத்தில் சுவாமி சகஜானந்தா பெயரில் மகளிர் கலைக்கல்லூரி அமைத்து தரப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநா தன் உறுதியளித்துள்ளார். சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) பல்கலைக்கழக வளர்ச்சி குறித்து ஆய்வு கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் கலந்து கொண்டார். இதில் பல்கலைக்கழக வளர்ச்சி குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர், பதிவாளர், இணைபதிவாளர் உள்ளிட்ட துறை சார்ந்த புல முதல்வர், பேராசிரியர்களிடம் கேட்ட றிந்தார். அப்போது விஜய் தலை மையிலான அரசு பல்கலை க்கழக வளர்ச்சியில் எவ்வாறு லஞ்சம் இல்லா மல் செயல்படுகிறது என்பது குறித்தும் பல்கலைக் கழகத்தில் உள்ள நிதி சிக்கல், ஊதிய உயர்வு, ஓய்வு ஊதியம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனை களையும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைவில் நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து அவர் பயின்ற பள்ளியான சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று சுவாமி சக ஜானந்தா சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து நந்தனார் ஆண்கள் மற்றும் பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவ மாணவி களுக்கு நந்தனார் கல்விக் கழகத்தின் தலைவர் கே ஐ மணிரத்தினம் ஏற்பாட்டின் பேரில் கல்லூரி செல்வ தற்கான ஊக்க தொகையை முதல் மூன்று இடங்களை பெற்ற 12 மாணவ மாணவி களுக்கு வழங்கி வாழ்த்து களை தெரிவித்தார். அப்போது மாணவ மாணவிகளிடம் இந்த பள்ளி ஒழுக்க நெறியுடன் கல்வியை கற்றுத் தருகிறார்கள் என்று அவரது அம்மா கடலூரில் இருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள இந்த பள்ளியில் சேர்த்ததாகவும் அதனை தெடர்ந்து பள்ளியில் கற்பித்த நல்லொழுக்கத் தால் சிறந்த கல்வி கற்று தற்போது உங்கள் முன்பு ஒரு அமைச்சராக நிற்கிறேன். ஆகையால் இந்த பள்ளியை மேம்படு த்துவது ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கடமையா கும். அடித்தட்டு மக்கள் கல்வி பயில்வதற்கு தமிழக முதல்வர் ஜோசப்விஜய் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நந்தனார் கல்வி கழகத்தில் சாமி சகஜானந்தா பெயரில் மகளிர் கலைக்கல்லூரி அமைப்பதற்கு உடனடி யாக நடவடிக்கை மேற் கொள்வேன். என்று கூறி னார். பின்னர் ஓமகுளத்தில் உள்ள நந்தனார் மடத்திற்கு சென்று சாமி சகஜானந்தா கோவிலில் வழிபட்டார். இந்நிகழ்ச்சியில் நந்தனார் கல்வி கழக தலைவர் திரு வாசகம் பொருளாளர் ஜெய ச்சந்திரன், காங்கிரஸ் கட்சி யின் மாவட்ட தலைவர் சித்தார்தன், நிர்வாகிகள் மணிமொழி சௌந்தரபாண் டியன், பாலச்சந்தர் அண்ணா மலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பட்டு அதிகாரி குமார், துணை கட்டுப்பாட்டு அதிகாரி ராஜா, இளைஞர் காங்கிரஸின் முன்னாள் மாநில துணைத்தலைவர் கமல் மணிரத்தினம், துணைத் தலைவர் அரவிந்த் மணிரத்தினம், கட்சியினர் கிருஷ்ணன், தமிழரசன் கஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ் வளவன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் செல்லப் பன், அறவாழி, சகஜா னந்தா மணிமண்டபம் ஒருங்கினைப்பாளர் பாலையா, தமிழக வெற்றிக் கழக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வடக்கு மெயின்ரோடு அம்பேத்கர் சிலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உயர்கல் வித்துறை அமைச்சருக்கு நந்தனார் கல்விக்கழக தலை வர் கே. ஐ மணிரத்னம் தலை மையில் அமைச்சருக்கு மேளதாள முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.</p>
