தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகப்பேறு பணியில் செவிலியர்களின் சிறப்பான பணிக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு விருது

3 Feb 2026, 4:00 pm
மகப்பேறு பணியில் செவிலியர்களின் சிறப்பான பணிக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு விருது
<p><strong>மகப்பேறு பணியில் செவிலியர்களின் சிறப்பான பணிக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு விருது</strong></p> <p>சிதம்பரம், பிப்.3- &nbsp;சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவ மனைக்குச் சர்வதேச மருத்துவப் பயனாளிகள் பாதுகாப்புச் சங்கத்தின் கருத்தாய்வில், மகப்பேறு மருத்துவத்தில் செவிலியர்கள் மேலாண்மைக்கான சிறந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்துத் தமிழக அரசால் சிறந்த மகப்பேறு மருத்துவர் விருது பெற்ற சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை மருத்துவர் கே. ராகுல் ஆனந்து செவ்வாய்க்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசுகை யில், &quot;கடந்த ஜனவரி 30ம் தேதி தெலங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் சர்வதேச மருத்துவப் பயனாளிகள் பாதுகாப்புச் சங்கத்தின் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 29 நாடுகளிலிருந்து சுமார் 800 மருத்துவமனைகள் பங்கேற்றன. மேற்கண்ட நாடுகளில் மருத்து வத்துறையில் நடைபெற்ற மிகச்சிறப்பான சிகிச்சைகள் குறித்துக் கருத்தாய்வு செய்யப்பட்டது. இதில் &#39;மகப்பேறு மருத்துவத்தில் செவிலி யர்கள் மேலாண்மை&#39; என்ற தலைப்பி லான கருத்தாய்வில் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையைத் தேர்வு செய்து சர்வதேச அளவில் சிறந்த விருது வழங்கியுள்ளனர். இந்த விருதைச் சூடான் நாட்டைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர், சிதம்பரம் அரசு மருத்துவ மனை மருத்துவர் ராகுல் ஆனந்து, செவிலியர் புஷ்பலதா பெரியநாயகம், அறுவை அரங்கச் செவிலியர் புவ னேஸ்வரி லோகநாதன் ஆகியோரிடம் வழங்கினார். பொதுவாக, பிரச வத்திற்குப் பிறகு ஏற்படுகிற அதி கப்படியான உதிரப்போக்குதான் மகப்பேறு மரணங்களுக்கான முதன்மையான காரணமாக உள்ளது. சிதம்பரம் அரசு மருத்துவமனை யில் ஆண்டுக்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்றா லும், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உதிரப்போக்கினால் மரணங்கள் ஏற்படவில்லை. இதற்கு முழுமுதல் காரணமாகவும், முதுகெலும்பாகவும் இருப்பவர்கள் செவிலியர்கள்தான். மருத்துவர்களாகிய நாங்கள் பல்வேறு பணிகளில் இருந்தாலும், பிரசவத்திற்கு வரும் மகளிரை &nbsp;கூர்ந்து கவனித்து, உதிரப்போக்குத் தொடங்கும்போதே அதைக் கண்டறிந்து உரியச் சிகிச்சை அளிப்பதால் மரணங்கள் தவிர்க்கப்படுகின்றன. &nbsp;இந்நிலையில் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் மருத்துவமனையை ஆய்வு செய்து 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான உயரிய மருத்துவ உபகரணங்களை வழங்கி, இந்தச் சேவை தொடர ஆணை பிறப்பித்துள்ளார். இந்த விருதினைச் செவிலியர் சமூகத்திற்காகவும், மருத்துவமனையில் பயன்பெற்ற தாய்மார்களுக்கும் அர்ப்பணிக்கி றோம்,&quot; என மருத்துவர் கே. ராகுல் ஆனந்து தெரிவித்தார். இச்சாதனையை அறிந்த சக மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் மருத்துவர் மற்றும் அவரது குழுவினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.