தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிதம்பரத்தில் சிபிஎம் தொடர் முயற்சிக்கு வெற்றி மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

21 Jul 2026, 11:30 pm
சிதம்பரத்தில் சிபிஎம் தொடர் முயற்சிக்கு வெற்றி  மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்
<p><strong>சிதம்பரத்தில் சிபிஎம் தொடர் முயற்சிக்கு வெற்றி மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்</strong></p><p>சிதம்பரம், ஜூலை 21- சிதம்பரம் நகரத்தின் பிரதான சாலையில் அமைந்துள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலைத் தூர்வாரிச் சீரமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. சிதம்பரம் நகரத்தின் முக்கியச் சாலையான வடக்கு மெயின் ரோட்டின் ஓரத்தில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூர்வாரப்படாமல் அடைபட்டுப் போயி ருந்தது. அத்துடன், அப்பகுதி யில் உள்ள வீடுகள், கடை கள் மற்றும் வணிக நிறு வனங்களின் கழிவுநீரும், கழிப்பறை நீரும் நேரடியாக இந்த வாய்க்காலில் விடப்பட்டதால் கடுமையான துர்நாற்றம் வீசி வந்தது. இதனால் வணிகர்களும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும், வாய்க்கால் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் இருந்ததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். கடந்த 19-ஆம் தேதி கூட இருசக்கர வாகனத்தில் வந்த சல்மான் பாரிஸ் என்பவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர் குழு உறுப்பினர் அகமது சலீம், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியருக்குத் தொடர்ந்து புகார்களை அனுப்பினார். இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் செவ்வாயன்று காலை பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்காலைத் தூர்வாரும் பணியைத் தொடங்கியது. இதற்குத் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ள அகமது சலீம், ஆக்கிரமிப்புகளால் சுருங்கியுள்ள வாய்க்கால் பகுதியைச் சீரமைத்து, அதன் மீது உடனடியாகக் கான்கிரீட் தளம் அமைத்து மூடி விபத்துகளைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.