தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஐடிஎப்சி தனியார் வங்கியில் பல லட்சம் முறைகேடு சிதம்பரம் துணை கண்காணிப்பாளரிடம் புகார்

17 Feb 2026, 3:36 pm
ஐடிஎப்சி தனியார் வங்கியில் பல லட்சம் முறைகேடு  சிதம்பரம்  துணை கண்காணிப்பாளரிடம் புகார்
<p><strong>ஐடிஎப்சி தனியார் வங்கியில் பல லட்சம் முறைகேடு &nbsp;சிதம்பரம் &nbsp;துணை கண்காணிப்பாளரிடம் புகார்</strong></p> <p>சிதம்பரம், பிப்.17- இருசக்கர வாகனக் கடன் வழங்கிய ஐடிஎப்சி (IDFC) தனியார் வங்கியில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிதம்பரம் டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர். பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் முகமது யூனுஸ், பரங்கிப்பேட்டை ஜமாத் நிர்வாகி முத்துராஜா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப்பைச் சந்தித்து மனு அளித்தனர். சிதம்பரம் நகரம் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வண்டிகேட் பகுதியில் உள்ள சுசுகி ஷோரூமில் ஐடிஎப்சி வங்கி மூலம் கடன் பெற்று வாகனங்கள் வாங்கியுள்ளனர். அந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர் ரவீந்தர், ஆசை வார்த்தைகளைக் கூறி தவணைத் தொகையைத் தன்னிடம் வசூலித்துவிட்டு, போலியான ரசீதுகளை வழங்கியுள்ளார். பின்னர் வங்கியிலிருந்து தவணை கட்டவில்லை எனத் தகவல் வந்தபோதுதான் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் ஊழியர் ரவீந்தர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை பணியிலேயே வைத்துள்ளனர். அவர் தொடர்ந்து அப்பாவி மக்களை ஏமாற்றி வருவதால், அவரை உடனடியாகக் கைது செய்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.